tamilkurinji logo


 

வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா,




வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா

First Published : Thursday , 5th November 2009 05:02:51 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா, வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா

நூலின் பெயர் ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள்

தொகுப்பாசிரியர் திரு.பாக்கியநாதன் கலை விளக்கு வெளியீடு

தங்க வயலில் விளைந்து ஆங்காங்கே சிதறிக்கிடந்த அற்புத நெல்மணிகளைச் சேகரித்து பக்குவத்துடன் பதப்படுத்தி பாங்காய் சமைத்து உலகத் தமிழர்க்குப் பாசத்துடன் பரிமாறியிருக்கும் பார்போற்றும் விருந்தே பாக்கியநாதனின் ஒன்றிணைந்த சிந்தனை முத்துக்கள் எனும் தொகுப்பு நூல். சேரன் செங்குட்டுவன் கை காட்ட கனக விசயர் கல்லெடுக்க கண்ணகி கற்பு தெய்வமானாள் அன்று: கலாநிதி செங்குட்டுவன் கை காட்ட கனக வயலின் எழூத்துக்கள் கண்ணில்பட அயல்நாடு வாடி; தமிடிர்கள் செய்த பாக்கியம் கலைமகளின் கரங்களில் இன்னுமோர் ஏடு?

கலைச் சுடரின் துணையோடு பாக்கியநாதன் நூற்கடலுள் மூழ்கி நல்முத்தெடுத்து அவற்றை நளினமாய்த் தொடுத்து தமிழ்த் தாய்க்கு அணிவித்த நவமாலையே இந்நூல். இலக்கிய கடலில் பயணி;ப்போரைத் தமிழெனும் கரைசேர்க்க கலங்கரை விளக்காய் வழி காட்டியிருக்கிறது கலைவிளக்கு. பொதுவாக தொகுப்பு நூலெனில் அது காசுமாலை போல ஒத்த வடிவமுடைய ஒருமித்த செய்திகளின் கோர்வையாக இருக்கும். ஆனால் இத்தொகுப்பு நூலோ முன்னிலிருந்தும் உயரியதாக கவிதைகளும் கட்டுரையுமாய் உண்மை நிகழ்வுகளும் உருப்படியான தத்துவங்களுமாய் விநோதச் செய்திகளும் விலங்கியல் குறிப்புகளுமாய் அறிவுரைக் கொத்துக்களும் அறிவியல் உண்மைகளுமாய் பொன் மொழிகளால் அலங்கரிக்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப் பெற்ற அட்டிகையாய் சுடர்விடுகின்றது.

ஆசிரியர் கையாண்டிருக்கின்ற வார்த்தைகள் சில நேரம் அம்புகளின் கூர்மையாய் அல்லித் தடாகத்தின் குளுமையாய் அனல் மின் உலையின் வெம்மையாய் பூந்தேனின் இனிமையாய் வானமிழ்தின் வளமையாய் உடற்பிணிக்கு மருந்தாகும் உச்சி மலை மூலிகை போல் உள்ளப் பிணி நீக்கும் உயிர் மருந்தாயும் ஆகின்றன.

தங்கவயல் லோகிநாதன் ஒரு வேந்தனைப் போல் சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவரது போர்ப்படைத் தளபதியாய் கவிதை கட்டுரை அதிசயச் செய்தி அறிவியல் குறிப்பு எனும் நால்வகைப் படைகளை ஒழுங்குற நகர்த்திச் சென்று இலக்கியப் போரில் தமிழனின் அறியாமையை வென்று போர்க்களத்திலிருந்து நம் இதயக் களத்திற்குள் இடம் மாறுகிறார் தொகுப்பாசிரியர் பாக்கியநாதன்.

மகுடத்தில் பதிக்கப் பெற்ற மாணிக்கம் போல இந்நூலில் தொகுக்கப்பெற்ற கதைகளி;ல் நீதிகள் உள்ளடங்கி மனித மனங்களில் ஒளியைப் புகுத்தி இருளிலிருந்து அறிவுலகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இந்த தொகுப்பில் இடம் பெறும் கவிதைகள் எல்லாம் அதீத அன்பின் அருமையை அகிலத் தலைவர்களின் அயரா உழைப்பை உலக ஞானத்தி;ன் உட்பொருளை பண்பு நலன்களின் பரிமளத்தை மழலைச் செல்வத்திற்கு மாதா அமுதூட்டும் பாங்குடன் புலம் பெயர்ந்த தமிழர்க்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாய் எடுத்துக் கூறுகின்றன.

தத்துவம் சமூகம் விஞ்ஞானம் பொருளாதாரம் பெண்ணியம் அரசாங்கம் எனும் அறுங்கோணத்தில் ஆராயப்பட்ட இந்நூலின் கட்டுரைகள் அனைத்தையும் அயல்கடல் தாண்டி வசிக்கும் தமிழர் வாசித்துணரும் வேளையில் அது அவர்கள் வாழ்வை புடமிட்டப் பொன்னாய் ஒளிரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

இயற்கை அன்னையின் விந்தைகளும் செயற்கை மனம் கொண்ட மனிதனின் நிந்தைகளும் விரவிய இத்தொகுப்பு நூல் அவலச் சுவையும் நகைச் சுவையும் அளவாக கலக்கப் பெற்ற ஓர் அருமையான நூல் எனலாம். நன்செய் வயலில் விளைந்த நற்கருப்பஞ்சாற்றின் இனிமையை மிஞ்சும் வண்ணமாக உள்ளது ஆசிரியரின் மொழிநடைச் சிறப்பு.

தூக்கு மரத்தை தூசாக எண்ணிய கட்டபொம்மன் சாதாரண மனிதனாயிருந்து சர்வாதிகாரியாக மாறிய ஹிட்லர் கண்டம் விட்டு கண்டம் தாவி விடுதலை வேள்வி செய்த கரிபால்டி மலை குலைந்தாலும் மனம் குலையாத சத்ரபதி அரபு நாட்டோடு அகிலத்தையே ஆண்ட நபிகள் நாயகம் என குவலயம் போற்றும்; தலைவர்களின் நீண்ட நெடிய வரலாற்றை அழகுறச் சுருக்கி அற்புதமாய் தமிழர்க்கு தந்திருக்கிறார் நூலாசிரியர்.

அறிவோடு ஆற்றல் புகழோடு பெருமை சொந்தத்தோடு சுற்றம் மரணத்தோடு மதி இவற்றையெல்லாம் இழக்கச் செய்யும் கோபத்தை கொன்று விடு எனும் ஆசிரியரின் அன்புக் கட்டளையை ஏற்று நடந்தோமானால் கவலைகள் நமக்கு நிரந்தரப் பகைவனாகி நம்மிலிருந்து எட்டாத தூரம் பறந்து சென்றுவிடும்.

மேல்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களைப் புலவர்கள் தொகுக்க புரவலர்கள் தொகுப்பித்தது அக்காலம்: இலக்கிய சித்தரின் எண்ணற்ற மலர்களை ஒரு வண்டினைப் போல் நாடிச்சென்று தேனெடுத்து உலகத் தமிழர்களி;ன் நாவிற்கு உன்னத களையூட்டியிருக்கும் திரு. பாக்கியநாதன் தமிழ் காக்கும் புரவலர் என்பதற்கு ஒன்றினைந்த சிந்தனை முத்துக்கள் எனும் இத்தொகுப்பு நூல் ஒரு சிறந்த சான்று! புதையலைக் கண்டறிந்து கலைமகள் கரம் சேர்க்கும் பாக்கியநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் இனிதாகத் தொடரட்டும்!



    Tags :    
வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா, வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா, வியர்வைத் துளியில் விளைந்த வெள்ளிய முத்துக்கள் – நூல் விமர்சனம் – முனைவர் ச.சந்திரா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இறையன்பு களஞ்சியம் – நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் திரு. இறையன்பு இஆப அவர்களின் களஞ்சியம். உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு உரை எழுதினார்கள், எழுதுகிறார்கள், எழுதுவார்கள். ஆது போல

மேலும்...

 மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10 நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல்

மேலும்...

 தொட்டு விடும் தூரம் தான் வெற்றி - நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
நூலின் பெயர் :தொட்டு விடும் தூரம் தான் வெற்றி நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது. "கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து" என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார்,

மேலும்...

 பாரதி இன்று இருந்திருந்தால் : நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி
பாரதி இன்று இருந்திருந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in