tamilkurinji logo


 

தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை,




தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை

First Published : Tuesday , 31st March 2009 09:58:52 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM




Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303

தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை, எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1

சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2

எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4

எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6

எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7

சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8

எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ

சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11

சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12

எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13

சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14

எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15

சந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16

எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17

சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18

எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19

சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20

எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21

சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22

எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23

சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24

எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25

சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26

எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ

ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28

எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29

சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30

எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31

சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32
எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33

தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34

எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35

சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36

எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37

சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38

எல்லாரும் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39

சந்தனம் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 40



    Tags :    
தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை, தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை, தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொழிலாளர் பாடல்கள் - எங்கும் நெல்
களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2 மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3 வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in