tamilkurinji logo
 

எல்லாவுமானாய்...நீ! - ஹேமா(சுவிஸ்),எல்லாவுமானாய்...நீ! - ஹேமா(சுவிஸ்), , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

,எல்லாவுமானாய்...நீ!,-,ஹேமா(சுவிஸ்),எல்லாவுமானாய்...நீ! - ஹேமா(சுவிஸ்), , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

எல்லாவுமானாய்...நீ! - ஹேமா(சுவிஸ்)

Tuesday , 13th July 2010 04:48:15 PM

எனது சிக​ரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீ​யே......
பு​கையி​லையாகியிருக்கிறாய்.
உன்​னை சுவாசித்து
நு​ரையீரல் காதலாய் தி​கைக்கிறது !

உ​ன்​னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்​லை.
உன்​னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவு​மே இல்​லை..!

எனது ப்ரிய கணணி​யை இயக்குகி​றேன் !
கீ​​போர்ட் ​மொத்தமும்
உன் ​பெயரின்
முதல் எழுத்துக்களாய்
நிரம்பியிருக்கிறது !

ஓ​​ஹோ..!
இதுவும் உன் வி​​ளையாட்டா என்று
எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம்​ போன​போக்கில்
ஏ​தே​தோ *கீ*க​ளை அழுத்துகி​றேன்..!
முழு மானிட்டர் தி​ரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!

அடி....
இங்குமா நீ என்று
மவு​ஸைக் கிளிக்கி
இந்த (உன்) அமானுட நில​வொளி​யை
​டாஸ்க் பாரில் சுருக்கப் பார்த்​தேன்.

கள்ளி...
மவுஸின் ​மென்​மையிலும்
நீ​யே நி​றைந்து ​கொண்டு
என்​னைக் கிளிக்குகிறாய் !

போதுமடி....
இந்த மார்ஃபிங் வி​ளையாட்டு
உனக்​கொரு ​மெயில் தட்ட
மு​னைகிறேன் மீண்டுமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்















பிற கவிதைகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in