tamilkurinji logo


 

வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி,வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி, , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

,வசன,கவிதை,புதுக்கவிதை,ஹைக்கூ,கவிதை,-,கவிஞர்,இரா.ரவி,வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி, , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி

Saturday , 31st October 2009 07:48:23 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/ilakkyam_detail.php on line 156
search
வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி,

உலகத்தரம் வாய்ந்த என்ற விளம்பரங்களில் பல பொருட்களுக்கு போடுவார்கள். ஆனால் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த ஒரு பொருள் உண்டு என்றால் அது tnpl காகிதம் தான். “காகிதபுரம் வழங்கும் காகிதத்திற்கு இணையான ஒரு காகிதம், உலகில் நாம் எங்கும் கண்டதில்லை” என்று அறுதியிட்டுக் கூறலாம். தரம் என்பது நிரந்தரம். பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்தவர்கள் காகிதபுரம் தொழிலாளர்கள். இங்கே காகிதம் மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். உழைப்பின் மேன்மையை இங்கே தான் உணர முடியும். மனித ஆற்றலின் மகத்துவத்தையும் இயந்திரங்களின் விந்தையையும் உணர்த்தும் இடம் இந்த காகிதபுரம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது நமது தமிழ்மொழி. தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டும் விதமாக பயனுள்ள, காலத்திற்கேற்ப ஒரு மாபெரும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலிருந்து, நடமாடும் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர். இரா.மோகன் தலைமையில் எங்களை அழைத்தமைக்கு முதற்க்கண் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.

இலக்கியம் என்பது கவிதை : கவிதை என்பது இலக்கியம். கதை,கட்டுரை இவை எல்லாம் இலக்கியமன்று. துணை இலக்கியம்.இதை நான் சொல்லவில்லை. போராசிரியர் மறைமலை இலக்குவனார் சொன்னது. தமிழர்களின் வாழ்வில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டு. தமிழர்களின் ஒழுக்கமான ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த வாழ்வியல் நெறியை பயிற்றுவித்தது இலக்கியம். உலக மனிதர்கள் யாவரும் ஓரினம் என “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என அய்நா மன்றம் வரை பதிவு செய்யப்பட்டது தமிழர் இலக்கியம். “கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு” என்ற அவ்வையின் கூற்று கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் இடம் பெற்றது. இப்படி தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகத் திகழந்த கவிதை பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.

இது கணினி யுகம். இருபத்திஒறாம் நூற்றாண்டு இன்றைக்கும் மரபுக்கவிதைகள் மிகத்தரமாக கவிஞர்கள் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மரபுக் கவிதைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.ஆனால் புதுக்கவிதை என்பது கற்காத பாமரர்களையும் சென்றடையும் விதமாக மிகச்சிறப்பாக வந்து கொண்டு இருக்கின்றது. புதுக்கவிதையுகம் என்றே சொல்லலாம். மகாகவி பாரதியார் கூட மரபுக்கவிதையும் எழுதி உள்ளார். புதுக்கவிதையும் எழுதி உள்ளார். வசன கவிதையும் எழுதி உள்ளார். கொக்கூ கவிதைகள் என ஐப்பானிய ஹைக்கூ கவிதை வகையினை அன்றே பாரதி அறிமுகம் செய்து வைத்தார்.

கவிக்கோ, அப்துல் ரகுமான்,புதுக்கவிதைத் தாத்தா மேத்தா, காலத்தால் அழியாத மகாகவி மீரா இப்படி தொடங்கிய புதுக்கவிதை பயணத்தில் இன்று எண்ணிலடங்கா புதுக்கவிஞர்கள் தோன்றி வருகிறார்கள். புதுக்கவிதையின் மீது பொறாமை கொண்டவர்கள் அல்லது புதுக்கவிதை எழுதத் தெரியாதவர்கள் சிலர் கேலி பேசுகிறார்கள். “மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட புதுக்கவிஞர்களின் எண்ணிக்கை கூடிவிட்டது” என்று. பதுக்கவிஞர்கள் பெருகுவதில் அப்படி என்ன? வருத்தம் என்பது புரியவில்லை. ஐப்பானில் ஹைக்கூ எழுதத் தெரியாதவர்களை மட்டமாக நினைப்பார்களாம். எனவே அங்கே ஒவ்வொரு மனிதனும் படைப்பாளியாக உருவெடுக்கின்றான். ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டால் தரை மட்டமான ஐப்பான் இன்று உலக அரங்கில் கொடி கட்டி பறக்குது என்றால் அதற்குக் காரணம் ஒப்பற்ற உழைப்பு அந்த உழைப்பை உணர்த்தியது ஹைக்கூ கவிதைகள், அவ்வளவு வலிiமை வாய்ந்த ஆயுதம் ஹைக்கூ.

கவியரசு கண்ணதாசன் வசன கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை அனைத்தும் எழுதி இருக்கிறார்.

“போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்” இந்த வரிகளை உச்சரிக்காத மேடைப் பேச்சாளர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு ஒரு காலத்திற்கு அனைத்து மேடைகளிலும் ஒலித்த வசன கவிதை இது.

கவியரசு கண்ணதாசனின் வசன கவிதைகள் இதோ.

காலக் கணிதம்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்
இவை தவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தலை அறிக
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சாட்டம்


இப்படி முடிக்கிறார்
கவியரசு கண்ணதாசனின் மற்றொரு வசன கவிதை
அழுவதில் சுகம்

தொழுவது சுகமா? வண்ணத்
தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா? உண்ணும்
விருந்துதான் சுகமா? இல்லை
பழகிய காதலை எண்ணிப்
பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகமென் பேன்யான்
அறிந்தவர் அறிவாராக


இது ஒரு உணர்வுக் கவிதை, உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் விளங்கும் அற்புதக் கவிதை, உணர்ச்சிக் கவிதை உண்மைக் கவிதை,புதுக்கவிதைத் தாத்தா, சாகித்ய அகதெமி விருதினை பெற்ற கவிஞர் மேத்தா புதுக்கவிதை உலகிற்கு புதுப்பாதை வகுத்தவர். சமூகப் புரட்சிக்கான ஒரு ஆயுதம் புதுக்கவிதை என்பதை உணர்த்தியவர். “ என்னுடைய போதி மரங்கள்” என்ற நூலில் அவரது புதுக்கவிதை.

கணக்கு

எத்தனை தடவை
கொள்ளையடிப்பது
ஒரே வீட்டில்
உன் கண்கள்


கவிவேந்தர் மேத்தாவின் வைர வரிகளில் இன்றைய வன்முறை கலாச்சாரத்தை ஆயுதக் கலாச்சாரத்தை விளக்கும் அழகிய புதுக்கவிதை

நாளை

உலக வீதிகளில்
ஊர்வலம் போகும்
ஆயுதங்கள்
வீடுகளுக்குள் ஒளிந்தபடி
எட்டிப் பார்க்கும்
மனிதன்

இதில் நாளை என்ற கவிதையின் தலைப்பை இன்று என்றும் மாற்றிக் கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும் சிலர் சமாதானம் என்ற பெயரில் பேச்சுவார்த்தை பலசுற்று நடக்கும் ஆனால் பிரச்சனை தீராது இதனைக் காட்டும் மேத்தாவின் புதுக்கவிதை.

சமாதானம்

வெள்ளைக்குடையை
விரித்து வைத்து
உள்ளே பார்த்தால்
ஆயிரம் ஒட்டைகள்


சாட்சி

எட்டிப்பாருங்கள் இதயத்தில் இருக்கிற காயங்களை உங்கள் முகம் கூட உள்ளே தெரியலாம்.

ஹைக்கூ

பழமொழிகளை ஒட்டியும் வெட்டியும் ஹைக்கூ எழுதலாம். அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையுமா? கேள்விப்பட்ட பழமொழி. அதை வெட்டி ஒரு ஹைக்கூ என்னுடையது

அய்ந்தில் வளையாதது
அம்பதில் வளைந்தது
முதியோர் கல்வி


அறுக்கமாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு அரிவாள். கிராமங்களில் கேள்விப்பட்ட புகழ்பெற்ற பழமொழி இதனை ஒட்டி நான் எழுதிய ஹைக்கூ

அறுக்கமாட்டதவன் இடுப்பில்
அய்ம்பத்தெட்டு அரிவாள்
அதிகபட்ச மந்திரிகள்


ஹைக்கூ கவிதைகளில் எதையும் உணர்த்தலாம், காதலையும் பாடலாம்

அமாவாசையன்று
நிலவு
எதிர்வீட்டு சன்னலில்


இன்று அரசியல்வாதிகளின் நிலையைப் பார்க்கும்போது மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு வருகின்றது. அதனையும் உணர்த்தமுடியும் ஹைக்கூ கவிதைகளில்.

வண்ணம் மாறுவதில்
பச்சோந்தியை வென்றார்கள்
அரசியல்வாதிகள்


இப்படி உள்ளத்து உணர்வுகளை ஹைக்கூவாக வடித்து படிக்கும் வாசர்களின் உள்ளத்திலும் அதிர்வுகளை நிகழ்ந்திடும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. வாசகர்களையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு மட்டுமே உண்டு. பெண்மைக்காக குரல் கொடுக்கும் ஹைக்கூ.

ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்
எழுத்திலும் அநீதி

ஆட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
மாட்டிற்குப் பெண் மகிழ்ச்சி
பெண்ணிற்குப் பெண் ஏன்? இகழ்ச்சி


இன்று மதங்களின் பெயரால் நடக்கும் வன்முறைகள் சொல்லில் அடங்காது. என்; தாய் சிறந்தவள் என்றால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் என் தாய் உன் தாயை விட சிறந்தவள் என்றால் சினம் கொள்வார்கள். அது போல என் மதம் சிறந்த மதம் என்று சொல்வதை விட்டுவிட்டு உன் மதத்தை விட என் மதம் சிறந்தது எனும் போது தான் பிரச்சனைகள் வருகின்றது. எல்லா மதமும் அன்பைத் தான் போதிக்கின்றன. ஆனால் மத வெறியர்கள் தான் வம்பைப் போதிக்கின்றனர்.இதனையும் வலியுறுத்தும் ஹைக்கூ

அன்று நெறி
இன்று வெறி
மதங்கள்

வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றி 10 பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்திகளை ஹைக்கூவில் 3 வரிகள் மட்டுமல்ல 3 சொற்களில் விளக்கும் என் ஹைக்கூ

அட்சயப்பாத்திரம்
திருவோடானது
பட்டச் சான்றிதழ்

வளரும் இன்றைய புதுக்கவிஞர்களின் புதுக்விதை

அம்மா சொன்னவள்

வெயிலில்
விளையாடிக்கொண்டிருக்கிறாயா?
வெகுளித்தனமாகச்
சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
இளையராஜாவின்
இசையில் இணைந்திருக்கிறாயா?
இளந்தூறல்
மழையின் நனைகின்றாயா?
களையெடுக்க
களத்துமேட்டுக்குச் செல்கின்றாயா?
மேற்படிப்புக்காக
மெட்ராசுக்குச் செல்கிறாயா?
பதினாறு புள்ளிக் கோலத்தை
வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயா?
பக்கத்துவீட்டு அக்காவிடம்
கதைபேசிக் கொண்டிருக்கிறாயா?
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உனக்காக ஒருத்தி பிறந்திருப்பாளென்று
சொன்னாள் அம்மா
என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்
நீ………..

துளிர்

ஆரப்பாளையம், மதுரை
அன்பே என் அன்பே…………

கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி மாதம் தொட,
ஷாக்ஸ_ம், ஷ_ லேஸ{ம் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!

ரேஷன் கடை க்யூவானாலும்

சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!

மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!


ஜேகா
இன்றைய புதுக்கவிதையில் ஆங்கிலச்சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

பிற கவிதைகள்
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in