tamilkurinji logo
 

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

குடும்ப தகறாறில் 2 மகள்களை கொலை செய்து தந்தை தற்கொலை

First Published : Friday , 16th June 2017 01:47:14 PM
Last Updated : Friday , 16th June 2017 01:47:14 PM


குடும்ப  தகறாறில்  2 மகள்களை கொலை செய்து  தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 கணவர், 2 மகள்களின் இறுதி சடங்கில்  பங்கேற்காத மனைவியை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர். சென்னை, மணலி சிபிசிஎல் நகரை சேர்ந்தவர் சங்கர் (38), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆஷா (32). இவர்களுக்கு கவிதாலயா (13), காவியா (10) ஆகிய இரண்டு மகள்கள்.

கடன் தொல்லை மற்றும் மனைவியுடன் பிரச்னை காரணமாக தன் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் சங்கர். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், ஒரே வாகனத்தில் 3 சடலங்களையும் இறுதி ஊர்வலமாக கொண்டு சென்று, தகனம் செய்தனர்.

இறுதி ஊர்வலத்தில் தந்தையுடன், 2 மகள்களையும் சடலமாக கொண்டு சென்றதை பார்த்து அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதற்கிடையில், ஆஷாவுக்கு உறவினர்கள் பலமுறை போன் செய்தனர். ஆனால் சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் அனைவரும் தவித்தனர். பின்னர், ஆஷா வருவதற்கு தாமதம் ஆனதால், சடலத்தை அடக்கம் செய்ய முடிவு செய்து, கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மகள்களுடன் தந்தை தற்கொலை என்ற செய்தி ஆஷாவுக்கு பத்திரிகைகள் மூலம் தெரியவந்தது. இதனால், பதறியடித்துக் கொண்டு அவர், மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு நேற்று காலை சென்றார்.

நடந்த சம்பவத்தை கூறி, கணவன் வீட்டுக்கு செல்ல பயமாக இருக்கிறது. பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். பின்னர், இதுபற்றி மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மணலி போலீசார், அங்கு சென்று ஆஷாவை அழைத்து கொண்டு, சிபிசிஎல் நகரில் உள்ள சங்கர் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது, ஆஷாவின் பெற்றோர், சகோதரர்களும் அங்கு வந்தனர். சங்கரின் உறவினர்கள், ஆஷாவை வீட்டுக்குள் சேர்க்கவில்லை. அவரது பெற்றோரும், எனக்கு இருந்த 2 பேத்திகளும், ஆஷாவால் இறந்தனர். அவர்களே போன பிறகு, எங்களுக்கு மகள் தேவையில்லை என கூறி, வீட்டுக்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வீடு திரும்பி வந்த ஆஷா உறவினர்களிடம் கூறுகையில், ‘‘கணவருடன் சண்டை போட்டதால் தூக்க மாத்திரை சாப்பிட்டேன். அந்த மயக்கத்தில் கோயம்பேடு சென்று, அங்கிருந்து ஒரு பஸ்சில் ஏறினேன். அங்கு சென்று மயக்கம் தெளிந்த பிறகுதான் கோயம்புத்தூர் வந்தது தெரிந்தது.


பின்னர், அங்கிருந்து திரும்பி வந்தேன்’’என்றார். ஆனால், ஆஷா முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை வீட்டில் சேர்க்க அனைவரும் மறுத்துவிட்டனர்.  இதையடுத்து போலீசார், ஆஷாவை சென்னை மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பத்தில் ஒப்படைத்தனர்.



  Tags :  
குடும்ப  தகறாறில்  2 மகள்களை கொலை செய்து  தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

குடும்ப  தகறாறில்  2 மகள்களை கொலை செய்து  தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

குடும்ப  தகறாறில்  2 மகள்களை கொலை செய்து  தந்தை தற்கொலை ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாட்டில் 400 கிலோ நகையுடன் 2 பெட்டகங்கள் மீட்பு
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடம் முழுவதும் சேதம் அடைந்ததால், கட்டடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, அந்த கட்டடத்தை தனியார் நிறுவனம் மூலம்

மேலும்...

 தலைமறைவு வாழ்க்கை - செல்போன் சிக்னலால் சிக்கிய நீதிபதி கர்ணன்
தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை போலீஸார் கைது செய்து கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல் வேறு நீதிபதிகள் மீது நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறினார். இந்த விவகாரம்

மேலும்...

 மாட்டிறைச்சிவிவகாரம் முதல்வர் எடப்பாடி பதிலைக் கண்டித்து 3 அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதல்வரின் பதில் திருப்தி இல்லாததால் பேரவையில் இருந்து அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய 3 பேர் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு இளைஞர் பேரவை

மேலும்...

 பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கணினிமூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பிலுள்ள, 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் பிஇ.,- பி.டெக்.,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in