tamilkurinji logo


 

ஆண்மை - புதுமைப்பித்தன்,




ஆண்மை - புதுமைப்பித்தன்

First Published : Wednesday , 6th January 2010 06:49:30 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

ஆண்மை - புதுமைப்பித்தன்,

ஆத்தூர் சிறிய ஸ்டேஷன். மூன்று மணி வண்டி கொஞ்ச நேரம்தான் நிற்கும். சீமா அதிலிருந்து இறங்கினான். எப்படியாவது ருக்மிணியை அவள் பெற்றோருக்குத் தெரியாமல் காண்பது என்ற நினைப்பு. கண்டு அவளிடம் என்ன பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் அவன் நினைக்க வில்லை. அவளை எப்படித் தனியாக, இரகசியமாகச் சந்திப்பது என்று கூட எண்ணவில்லை. வீட்டின் பக்கம் சென்றால் வெளி முற்றத்திற்கு வரமாட்டாளா? வந்தால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள மாட்டாளா? என்ற நம்பிக்கை. அவன் அவளைச் சந்தித்து வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகிவிட்டதென்ற நினைப்பே இல்லை.

ஸ்டேஷனிலிருந்து வந்தால் - அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும். நடந்து வருகிறான்.கரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என்று அடித்துக் கொண்டது.

எதிரே ஒரு பெண் வருகிறாள். அவள்தான். விதியும் கோழை சீமாவின் மேல், கருணை கூர்ந்தது போல் அவளை அனுப்பியது.

பால் போன்ற நிலாதான்.சிற்றாடை கட்டிக்கொண்டு சில சமயம் சீமாவென்று கூப்பிட்டு, பின்னோடு அலைந்து கொண்டிருந்த ஒரு குழந்தை, திடீரென்று பதினான்கு வயது நங்கையாக, அதிலும் அழகியாக மாறியதைக் கண்டால், யாருக்குத்தான் அந்த மங்கிய நிலவில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்?

அவள் தன்னைக் கடந்து செல்லும்வரை கூர்ந்து கவனித்தான்; உள்ளம் அவள்தானென்று காரணமற்றுக் கூறியது. ஆனால் அவள் ஜாடையெல்லாம்... மெதுவாகப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால்... நம்பிக்கை யாரை விட்டது?

"ருக்மிணி!"

அந்தப் பெண் திடுக்கிட்டு நின்றாள்.

"ருக்மிணி!"

வந்தவள் ருக்மிணிதான். தன் பெயரைக் கூப்பிடக் கேட்டதும் பயம். வாயடைத்த பயம். ஆனால் குரல் ஜாடை எல்லாம் இரண்டாம் முறை சப்தத்தில் யாருடையது மாதிரியோ பட்டது.




ஆண்மை - புதுமைப்பித்தன், ஆண்மை - புதுமைப்பித்தன், ஆண்மை - புதுமைப்பித்தன்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.
ஆதவன்  மேற்கில்  மறைந்து  கொண்டிருந்தான்.  டிசம்பர்  மாதத்துக்  குளிர்  சில்லென்று  இறங்கிக்  கொண்டிருந்து.  நான்  அந்தக்  குளக்கரையின்  மீது  நடந்து  கொண்டிருந்தேன்.  குளிர்  கலந்த  காற்று  மென்மையாய்  முகத்தை  வருடிச்  சென்றது.இடது  பக்கம்  குளத்து  நீர்  சலசலத்தது.  வலது  பக்கம்  கண்ணுக்கெட்டிய

மேலும்...

 சார்! கார்த்துடைக்கனுமா?
உடல் முழுக்க வியர்வையுடனும், நெஞ்சு நிறைய வெப்பத்துடனும், தன் இயலாமையால் எழுந்த கோபம், ஆத்திரம், கவலை, பயம் என உணர்ச்சிகளின் கலவையாய் வீட்டினுள் நுழைந்தான் முரளி. சமீபத்தில் ஒரு அரசு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்ட அப்பா ஈசிச் சேரில் கண் மூடிச்

மேலும்...

 மலரும் முள்ளாகும்
எல்லாம் முடிந்து விட்டது. அவள் பிரிந்து விட்டாள். கோர்ட் பிரித்து விட்டது. அவள் பிரிந்ததைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. ஆனால் அதற்காக அவள் எப்படியெல்லாம் பொய் சொன்னாள்? என்னென்ன பழியையெல்லாம் அவன் மீது சுமத்தினாள்? அதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

மேலும்...

 கைக்காசு,,,-விமலன்
  , எந்தப் பக்கம் கையை விட்டபோதிலும் அவரது உடம்பிலிருந்து ரூபாயை எடுத்து விடுகிறார். விட்டால் எட்டு திசகளிலும் இருந்து எடுப்பார் போலிருக்கிறது. வலதுபக்கம் கையைவிடுகிறார். மடித்து கட்டப்பட்டிருந்த கட்டம் போட்ட லுங்கியை மீறி வெளித் தெரிந்த அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து ரூபாயை எடுக்கிறார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in