இடுகாடு - -நிலாரசிகன்.

இடுகாடு - -நிலாரசிகன்.
விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.

இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.

முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.

பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.

முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட இவனுக்கு தெரியாது.

வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.

ஊருக்குள் முனியசாமிக்கு “அரைப்பைத்தியம்” என்று பெயர்.

எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.

முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.

பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்)
https://goo.gl/ssCH6a


03 Jun 2013

' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.

10 Apr 2013

சார்! கார்த்துடைக்கனுமா?

07 Apr 2013

மலரும் முள்ளாகும்

06 Mar 2013

கைக்காசு,,,-விமலன்

19 Jul 2012

பரவால்ல விடுங்க பாஸூ… - சதங்கா

19 Jul 2012

இடுகாடு - -நிலாரசிகன்.

12 Mar 2012

நீ, நான், நேசம் - எம்.ரிஷான் ஷெரீப்

02 Feb 2012

நம்பிக்கை இல்லாத நட்பு - ஈஸ்வர்

15 Jan 2012

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

27 Dec 2011

மைனர் - ரேகா ராகவன்