இட்லி தோசைக்கு சூப்பரான மீன்குழம்பு/Meen Kulambu | Fish Curry in Tamil

இட்லி தோசைக்கு சூப்பரான மீன்குழம்பு/Meen Kulambu | Fish Curry in Tamil
தேவையான பொருள்கள்
வவ்வால் மீன் / vaval fish  - அரை கிலோ
சின்ன வெங்காயம்  / smallonion  / 100  -(பொடியாக நறுக்கியது)
தக்காளி  / Tomoto  - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு / garlic  - 10 பல்
புளி  / Tamarind  - லெமன் அளவு
கடுகு  / Musterd - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் / manjal thool  - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் / Milagai thool  - 3 ஸ்பூன்
தனியா தூள்  / coriander powder - 5 ஸ்பூன்
சீரகத்தூள்  / seeragam thool - அரை ஸ்பூன்
வெந்தயம்  / venthayam - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை / curryleaves  - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்   Nallennai  - குழிகரண்டி அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அனைத்து மசாலாதூள்கள் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைத்துகொள்ளவும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி பின்பு கரைத்து வைத்துள்ள மசாலா கலவை  2 டம்ளர் தண்ணீர்  தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு மசலாவாசனை போய் குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீனை சேர்த்து அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து  கறிவேப்பிலை தூவி இறக்கினால் சூப்பரான மீன்குழம்பு ரெடி.







12 Jul 2021

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் / Prawns Pepper gravy

09 Jul 2021

இட்லி தோசைக்கு சூப்பரான மீன்குழம்பு/Meen Kulambu | Fish Curry in Tamil

04 Apr 2021

அசத்தலான இறால் பிரியாணி |Prawn biryani Recipe in Tamil

30 Mar 2021

மொரு மொரு கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

20 Feb 2021

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| Chettinad Nandu Kulambu | Crab Masala

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy