இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும்.


பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரீச்சை.


ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.


பெண்களுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும்.
பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.


பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது.


இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும். குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரீச்சம் பழம் அதிகம் துணை புரியும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரீச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும். உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.


குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து தந்தால் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கினால் ஏற்படும் பலகீனத்தைப் போக்க பேரீச்சம் பழத்தை அதிகம் உட்கொள்வது நல்லது.


பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.பேரீச்சம்பழங்களை வெயிலில் நன்றாக காயவைத்து, அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டும், கூடவே பசும்பாலை அருந்தினால் இன்னும் நல்லது.

இப்படி தொடர்ந்து இரண்டு மாதம் செய்து வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இது, சத்துகள் நிறைந்த ஒரு பெட்டகமாகவே திகழ்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.


பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
https://goo.gl/gqsSut






13 Oct 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

06 Oct 2020

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

06 Oct 2020

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

01 Oct 2020

நெஞ்சுச்சளி நீங்க தூதுவளை கசாயம் | Thoothuvalai kashayam | Tamil

29 Sep 2020

சளி, இருமல், தொண்டை வலி உடனே சரியாக இதை குடிங்க | Indira Samayal சுக்கு மல்லி காபி

20 Sep 2020

மாதவிடாய் கால வயிற்று வலி சரியாக | Mathavidai vali kuraiya | Tamil maruthuvam

17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.