இன்ஃபோசிஸ் தலைவரானார் நாராயணமூர்த்தி

இன்ஃபோசிஸ் தலைவரானார் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின், செயல் தலைவர் மற்றும் கூடுதல் இயக்குனராக, என்.ஆர். நாராயணமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். பெங்களூரில், @நற்று நடைபெற்ற இன்போசிஸ் நிறுவனத்தின், நிர்வாக குழு கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பங்குதாரர்கள் :இதுகுறித்து, இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:தகவல் தொழில்நுட்பத் துறையில், நிறுவனம் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நிறுவனத்தின் செயல் தலைவராகவும், கூடுதல் இயக்குனராகவும் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செயல் உதவியாளராக, இவருடைய மகன், ரோகன் நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை செயல் தலைவராக உள்ள எஸ்.கோபாலகிருஷ்ணன், செயல் துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோரிக்கை:இதுவரை, இன்போசிஸ் நிறுவன நிர்வாக குழு தலைவராக இருந்த, @க.வி.காமத், அப்பொறுப்பில் இருந்து விலகி, இன்@பாசிஸ் நிர்வாக குழுவின், தலைமை இயக்குனராக செயல்படுவார்.எஸ்.டீ.சிபுலால், தொடர்ந்து நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணிபுரிவார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனருள் ஒருவரான நாராயணமூர்த்தி, கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். அதில் இருந்து இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தற்போது நாராயணமூர்த்தி, மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/UWCsNV


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்