tamilkurinji logo


 

எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்

First Published : Wednesday , 5th September 2018 07:51:03 PM
Last Updated : Wednesday , 5th September 2018 07:51:03 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.
இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணத்தை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டன. திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மணமகள் சந்தியா வீட்டில் இருந்த வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மாயமானது குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்தூர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காததால்தான் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி மாயமானது தெரிய வந்தது.

இந்த நிலையில் சந்தியாவின் செல்போன் எண் மூலம் விசாரித்தபோது அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் மணப்பாறைக்கு சென்றனர்.

மணப்பாறை மஸ்தான் வீதியில் உள்ள சத்யா என்பவரது வீட்டில் சந்தியா இருப்பது தெரியவந்தது. அவர் சந்தியாவின் தோழி ஆவார்.

போலீசார் அங்கு சென்றபோது வீட்டில் சந்தியாவும், சத்யாவும் இருந்தனர். இதையடுத்து போலீசார் சந்தியாவை மீட்டு கோபிக்கு அழைத்து வந்தனர்.

நேற்று மாலை கோபி ஜே.எம்.-1 கோர்ட்டில் சந்தியா ஆஜர்படுத்தப்பட்டார். தனி அறையில் வைத்து சந்தியாவிடம் மாஜிஸ்திரேட்டு பாரதிபிரபா விசாரித்தார்.

அப்போது திருமணம் பிடிக்காததால்தான் வீட்டை விட்டு வெறியேறியதாக சந்தியா கூறினார். மேலும் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று கூறிய அவர் கோவையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு தன்னை அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

பின்னர் சந்தியாவின் பெற்றோரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது அவர்களிடம் சந்தியா கூறிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் சந்தியாவின் பெற்றோர் தனது மகளை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

இதைத்தொடர்ந்து முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியா பின்னர் தனது பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். அதன்படி சந்தியாவை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தக்கூடாது.

அவரை அடித்து துன்புறுத்துவதோ, உறவினர்கள் அவரிடம் விசாரிக்க அனுமதிக்கவோ கூடாது என்று சந்தியாவின் பெற்றோருக்கு மாஜிஸ்திரேட்டு அறிவுரை கூறினார். பின்னர் சந்தியா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்னதாக சந்தியா கடத்தூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் 20 வயது வித்தியாசம் இருந்ததால் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தினர்.

மேலும் திருமணம் செய்யாவிட்டால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் மிரட்டினர்.

ஆகையால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் எனக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை. எனவே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றேன்.

மணப்பாறையில் உள்ள எனது தோழி சத்யா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கு என்னை போலீசார் மீட்டு கோபி கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். இவ்வாறு சந்தியா கூறியுள்ளார்.


எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in