ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை) சந்தித்ததாக சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியான பின், புதிய, குட்டியான, அழகான ஓட்டுனரில்லா கார் மாடலை கடந்த வாரம் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள். அதில் ஸ்டியரிங், பிரேக், ஆக்சலரேட்டர் போன்ற எதுவும் இல்லை.

அந்த சோதனை கார், யாராவது குறுக்கே வந்தால் உடனே நின்றது. பார்க்கிங் லைட் சிகப்பில் எரிந்தால் புரிந்து கொண்டு நின்றது. சிக்னலில் சற்று முந்த நினைத்த காருக்கு வழி விட்டு காத்திருந்தது. இப்படி கூகுளின் ஆளில்லாத கார் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியதை பத்திரிகையாளர்கள் நேரில் பார்த்தார்கள்.

அமரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் அடுத்த மாதம் சோதனை ஓட்டத்தில் இந்த கார்களை களமிறக்கும். நிஜ சாலைகளில். ஆனால் ஒன்று, தற்காலிகமாக ஸ்டியரிங்கும், கூடவே ஒரு நபரும் அந்த சோதனைகளில் பயணிப்பார். 'என் மகனுக்கு 11 வயதாகிறது. அவனுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் வயது வருவதற்குள் இந்த கார்களை பொதுமக்களுக்கு விற்க ஆரம்பித்து விடுவோம்' என்கிறார் கூகுள் கார் பிரிவு தலைவர் கிறிஸ் உர்ம்சன்.

அதாவது, இன்னும் ஐந்து ஆண்டில், அவரது மகன் லைசென்ஸ் எடுக்கும் வயதை எட்டும்போது, டிரைவர் இல்லாமல் ஓடும் காரை அறிமுகப்படுத்தி, லைசென்ஸ் எடுக்கவேண்டிய அவசியமே இல்லாமல் செய்யப்போகிறார் உர்ம்சன்.
https://goo.gl/RXWxH1


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்