tamilkurinji logo


 

கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,tamil news india news heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered

tamil,news,india,news,heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered




செய்திகள் >>> இந்தியா

கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

First Published : Thursday , 9th August 2018 08:06:53 PM
Last Updated : Thursday , 9th August 2018 08:06:53 PM


கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை  - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,tamil news india news heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered

கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெய்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அணைகள் உள்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன.

மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால், முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இரண்டு மாநிலங்களிலும் பெய்து வரும் கனமழையை அடுத்து தமிழகத்தில் காவிரி கரையோரமுள்ள 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு ஆணையம் கூறியுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை  - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,tamil news india news heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை  - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,tamil news india news heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை  - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,tamil news india news heavy-rain-hits-two-states-Flood-Warning-aletered
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை பெய்தது.தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. தாழ்வான

மேலும்...

 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in