கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை  போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy
எல்லா  பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு  நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது.


கர்ப்ப காலத்துல மன அழுத்தம் வர்றதுக்கு முக்கிய காரணமா ஹார்மோன் சமநிலையை சொல்லலாம். பிறகு வாந்தி, தூக்கமின்மை, அல்லது  ரொம்ப நேரம் தூங்கறது, சாப்பிட பிடிக்காம இருக்கறது மற்றொரு முக்கியமான ஒன்று வீட்டுச்சூழல். இப்படி பல காரணம் இருக்குது.


20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பலவித நோய் தாக்குதல்களுக்கு இன்று மருத்துவத்தில் தீர்வு உண்டு. இது விஞ்ஞானத்தின் முன்னேற்றம். வருமுன் காப்பதற்கும் பல தீர்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அவைதான் தடுப்பு ஊசிகள், சத்து மாத்திரைகள், உணவு முறைகள், சுகாதாரச் சூழ்நிலை என உருவாயின. ஆயினும் மக்கள் அதிகமாக நோய் வாய்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.


கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப்பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும்.


குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.


கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

 புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

 உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

 கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.


https://goo.gl/ZBirMZ






06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses