கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது

கள்ள நோட்டு அச்சடித்ததாக  தாய் மற்றும் தங்கையுடன்  பிரபல நடிகை கைது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர் . அப்போது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பெரிய பையில் இரண்டரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்போது இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரகசியம் காத்த போலீசார், கொல்லத்தில் வசிக்கும் அந்த நடிகையின் சொகுசு பங்களாவை கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும் படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் போலீஸ் படையினர் அந்த பங்களாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூரிய சசிகுமார்  அவரது தாயார் ரமா தேவி தங்கை சுருதி ஆகியோரை கைது செய்தனர்.அங்கிருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் கைப்பற்றபட்டது.

அவர்கள் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.
https://goo.gl/WB2Xcb






18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்