காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது

காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது
காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை திரு.வி.க. நகர், கோபாலபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (33), ரயில்வே ஊழியர். இவரது மனைவி கல்பனா (31). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மற்றும் 7 வயதில் 2 மகன்கள் உள்ளனர். கல்பனா, கடந்த ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் பிள்ளைகளை கவனித்து கொண்டார். சுரேஷ் தினமும் வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.

அதுபற்றி கேட்டபோது, வேலை அதிகமாக இருந்தது என கூறியுள்ளார். மேலும், வேறு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி கல்பனா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சுரேஷ் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கல்பனாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, கல்பனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் கல்பனா, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார், சுரேஷிடம் விசாரித்தனர். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.


அதில், சுரேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதை அறிந்த கல்பனா, அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவத்தன்று தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், கல்பனாவை கழுத்தை நெரித்து கொன்றார்.


பின்னர், அதை மூடி மறைப்பதற்காக, கல்பனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையால், போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
https://goo.gl/a5j3CT


15 Sep 2018

காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது

01 Jul 2014

சின்னம்மை வடு மறைய

02 Mar 2014

பீரியட்ஸ் வலி குறைய

02 Mar 2014

தயிர், மோரை எப்படி சாப்பிடலாம்

24 Jul 2013

சமையல் குறிப்புகள்

14 Jul 2011

குழந்தையின் மலச்சிக்கல் தீர

14 Jul 2011

மலச்சிக்கல் தீர

14 Jul 2011

மலச்சிக்கல் தீர

14 Jul 2011

அஜீரணம் சரியாக

14 Jul 2011

அல்சர் நோய் குணமாக