கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத  மழை  324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.


ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று, எதையுமே விட்டு வைக்காமல் வெள்ளம் சூழ்ந்து உள்ளது

யாராவது வெள்ளத்தில் சிக்கிய நம்மை காக்க வரமாட்டார்களா என்று ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.கேரளாவில் உள்ள 39 அணைகளில் 35 அணைகளுக்கும் மேல் முழுக்கொள்ளவை எட்டி, அபாயகரமான அளவிற்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடுகள் நிலச்சரிவினால் இடிந்து, தினம் தினம் உயிர்பலி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல இடங்களில் சாலை முற்றிலுமாக துண்டிகப்பட்டு உணவுக்கு கூட தள்ளாடி வருகின்றனர்.

இந்து குறித்து கேரள முதல்-மந்திரி பினரயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தை சந்தித்துள்ளது. கேரள மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.  1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில்  2, 23, 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உங்கள் உதவி பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்க முடியும். 
https://goo.gl/2U7wNt


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்