tamilkurinji logo


 

கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers ..

Kerala,Floods:nayanthara,donates,rs,10,lakhs,to,kerala,chief,ministers,..




கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி

First Published : Friday , 17th August 2018 08:10:41 PM
Last Updated : Friday , 17th August 2018 08:10:41 PM


கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers ..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா.

கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், வீடு இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், இந்த நிவாரணத்துக்காக நிதி உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலரும் கேரளாவுக்கு உதவிவரும் நிலையில், சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், ஸ்ரீபிரியா 10 லட்ச ரூபாய், தென்னிந்திய நடிகர் சங்கம் 5 லட்ச ரூபாய், ரோகிணி 2 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். மேலும், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நயன்தாராவும் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers .. கேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி,Kerala Floods:nayanthara donates rs 10 lakhs to kerala chief ministers ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

மேலும்...

 சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு
பாபா’, ‘சர்கார்’  உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரச்சனைகள் குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு இன்று தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்  வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது

மேலும்...

 கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர் . அப்போது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ,

மேலும்...

 ஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு
 நயன்தாரா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ட்ரெய்லர் ஜூன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.‘டிமான்ட்டி காலனி’ படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய கணவராக கெஸ்ட் ரோலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in