சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் / Prawns Pepper gravy

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல்  /  Prawns Pepper gravy
இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்..
தேவையான பொருட்கள்.
இறால்  / Frawn  - அரை கிலோ
பச்சை மிளகாய் / greenchilli  -1
இஞ்சி, பூண்டு விழுது / ginger garlic paste  - 1 ஸ்பூன்
அரைத்த  பெரிய வெங்காயம் / Big onion  - 2
அரைத்த தக்காளி / Tomoto  - 2
மல்லி தூள்  coriander - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்  / Chilli  Thool - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் / pepper Thoool  - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்  / tuemeric  - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 குழிகரண்டி அளவு
உப்பு,  - தேவையான அளவு

செய்முறை.

இறாலை நன்றாக கழுவி  வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,   வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.

அதனுடன்  மசாலா துள்  சேர்த்து  அனைத்தும்  நன்றாக பிரட்டவும்.  மசாலா  வாசனை போனவுடன்   தக்காளி  போட்டும்  நன்கு வதக்கி  1 டம்ளர்  தண்ணீர் சேர்த்து  அதனுடன்  இறாலை போட்டு நன்கு  கிளரி  கொதிக்க ஆரம்பித்தவுடன்  அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். .இறால் வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான இறால் மிளகு வறுவல் ரெடி.







12 Jul 2021

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் / Prawns Pepper gravy

09 Jul 2021

இட்லி தோசைக்கு சூப்பரான மீன்குழம்பு/Meen Kulambu | Fish Curry in Tamil

04 Apr 2021

அசத்தலான இறால் பிரியாணி |Prawn biryani Recipe in Tamil

30 Mar 2021

மொரு மொரு கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

20 Feb 2021

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| Chettinad Nandu Kulambu | Crab Masala

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy