சூப்பரான சில்லி இட்லி / Chilli Idli Fry

சூப்பரான  சில்லி இட்லி / Chilli Idli Fry
தேவையான பொருட்கள்

இட்லி  / idli  - 4 சதுரமாக கட் செய்தது
பெரிய வெங்காயம்  / onion - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது / ginger garlic paste  - ஒரு ஸ்பூன்
சில்லி சாஸ்  / chilli sauce       - 1    ஸ்பூன்
சோயா சாஸ்  /  soy sauce    - 1  ஸ்பூன்
தக்காளி   சாஸ்  - 1  ஸ்பூன்
குடைமிளகாய் capsicum  -  நறுக்கியது  ஒன்று
பூண்டு  - நறுக்கியது 2 ஸ்பூன்
வெங்காய தாள்   --- நறுக்கியது  3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  - தேவையான அளவு

செய்முறை


நான்ஸ்டிக்கடாயில்    இட்லி துண்டுகளை போட்டு பொரிப்பதற்கு  தேவையான அளவு எண்ணெய்  ஊற்றி காய்ந்ததும்  இட்லி துண்டுகளை போட்டு  பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு நான்ஸ்டிக்கடாயில்   2   மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும்  பூண்டு  போட்டு  வதக்கி  பின்பு   வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

சிறிது உப்பு  சேர்த்து  2  நிமிடம் வதக்கி அதனுடன்   குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்த வதக்கவும். அதனுடன்   மூன்று சாஸ்களையும்  போட்டு  வதக்கி  அதோடு  பொரித்த  இட்லி துண்டுகளை  போட்டு வதக்கவும்.

தேவையெனில்  கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளரி இறக்கி வெங்காயத்தாள் போட்டு அலங்கரித்து   சூடாக பரிமாறவும






10 Oct 2020

கார கொழுக்கட்டை / kara kozhukattai recipe in tamil

07 Oct 2020

சூப்பரான சில்லி இட்லி / Chilli Idli Fry

18 Feb 2019

முட்டை சப்பாத்தி | egg chapati

16 Sep 2018

வரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji

02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha