சூப்பரான முட்டை தொக்கு | Egg Curry Recipe

சூப்பரான  முட்டை தொக்கு | Egg Curry Recipe
சப்பாத்தி ,இட்லி,  தோசைக்கு இந்த முட்டை தொக்கு சூப்பரா இருக்கும்.
தேவையான பொருள்கள்:
முட்டை / Egg  - 5
தக்காளி /  Tomoto - 2
சின்ன வெங்காயம்  /  Small onion - 150 கிராம்
தாளிக்க சோம்பு  / fennel seeds  - அரை ஸ்பூன்
மஞ்சள் துள்  / Turmeric - அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  / Ginger garlic paste - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்  /  Nallennai - 1 குழிகரண்டி அளவு
உப்பு -தேவையான அளவு.

வறுக்க தேவையானவை:

மிளகு  / Milagu  - 1 spoon
சோம்பு  /  Sombu  - 1
காய்ந்த மிளகாய் / Dry chilli   - 6
தேங்காய்  / Coconut  - 1 கைப்படி அளவு
சீரகம்  / Seeragam - 1 ஸ்பூன்
கொத்தமல்லி  / Coriander  - 2 ஸ்பூன்
பட்டை / Pattai  - 1 துண்டு
அன்னாசி பூ  - 1
ஜாதி பத்ரி - 1
பிரிஞ்சி இலை -2

செய்முறை :

முட்டையை வேக வைத்து கொள்ளவும் .
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வடசட்டியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு ,சோம்பு , காய்ந்த மிளகாய் சீரகம் ,கொத்தமல்லி,  பட்டை  ,அன்னாசி பூ  ,ஜாதி பத்ரி , பிரிஞ்சி இலை  இவை அனைத்தையும் வாசனை வரும் வரை வருத்து கொள்ளவும்.
மசாலா  கருகினால்  கசக்கும்  கருகாமல் வருத்து அதனுடன் தேங்காய் சேர்த்து  ஒரு கிளரு கிளரி ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
பின் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளியை நன்கு வதக்கி ஆற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலா ,தக்காளி விழுது ,மஞ்சள் தூள் ,உப்பு , 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
நன்கு கொதித்து கெட்டியானவுடன் முட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சூப்பரான முட்டை தொக்கு ரெடி்06 Mar 2022

சூப்பரான முட்டை தொக்கு | Egg Curry Recipe

20 Sep 2021

முட்டை அடை குழம்பு |Muttai adai kulambu

26 May 2021

முட்டை தக்காளி பொடிமாஸ் | muttai thakkali podimas

19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops