tamilkurinji logo


 

சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை

First Published : Thursday , 11th October 2018 07:02:16 PM
Last Updated : Thursday , 11th October 2018 07:02:16 PM


சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத் தகராறில் ஆத்திரமுற்ற கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வரும்.

அதில் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்குதலும் நடக்கும். அக்கம் பக்கம் உள்ள உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார்கள். இந்நிலையில் நேற்று கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் வெங்கடேசனுக்கும் அவரது மனைவி துர்காவுக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த வெங்கடேசன் தனது இரு பெண் குழந்தைகள் எதிரிலேயே தனது மனைவி துர்காவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே துர்கா உயிரிழந்தார்.

இதையடுத்து தனது இரு பெண் குழந்தைகளை அருகில் உள்ள துர்காவின் தாயார் வீட்டில் விட்டுவிட்டு வந்த வெங்கடேசன், தனது வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏதேச்சையாக துர்கா வீட்டுக்கு வந்த உறவினர்கள் தூக்கில் வெங்கடேசனும், படுக்கையில் துர்காவும் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக பூந்தமல்லி போலீஸாருக்குப் புகார் அளித்தனர். அங்கு வந்த பூந்தமல்லி போலீஸார் இருவரது பிணத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்பப் பிரச்சினையில் மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கணவன் மனைவி உயிரிழந்ததால் இரண்டு பெண் குழந்தைகளும் அனாதைகளாகி விட்டனர்.

சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தமிழக மக்களை பயத்தில் உறைய வைப்பது டெங்கு காய்ச்சல் தான்.ஆண்டுதோறும்

மேலும்...

  “ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; வழக்கு தொடருவேன்”அமைச்சர் ஜெயக்குமார்
மீடூ’ விவகாரம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அவரது கருக்கலைப்பு தொடர்பாக அந்த பெண்ணின் தாயாருடன் அவர் பேசும் ஆடியோ இது தான் என்றும் சமூக

மேலும்...

 சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
சென்னையில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று எழும் பூர்

மேலும்...

 கத்தியால் குத்தப்பட்ட கணவர் மரணம்- மனைவி, காதலன் கைது
திருவான்மியூரில் 2 நாட்களுக்கு தனது காதலன் மூலம் மனைவி நடத்திய கொள்ளை முயற்சி நாடகத்தில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய இருந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, நார்த்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரவன் (30). மென்பொறியாளராக சென்னை தரமணியில் உள்ள ஒரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164