ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.
இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.
அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக இயக்கவிருக்கிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.
இதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாரி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related :
மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்
பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...
பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை
ஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு
தமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...
ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி
விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...
பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...
நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.
புகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...
மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்
மாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...
மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்
தமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...
நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி
சித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...
நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்
நிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...