tamilkurinji logo


 

தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்

First Published : Wednesday , 29th August 2018 06:36:07 PM
Last Updated : Wednesday , 29th August 2018 06:36:07 PM


தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்,tamil news india news

திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா (34). இவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது வீடு சொந்த வீடு ஆகும். ரேணுகா தனது வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றைக் கட்டி வந்தார்.

இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவர் இது குறித்து ஆட்சேபித்துள்ளார். இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் வாய்த் தகராறு ஆகி போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்குச் சென்றது. நேற்று முன் தினம் தகராறு அதிகமாகவே, அமிர்தவள்ளி திருவேற்காடு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில், இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அமிர்தவள்ளிக்கு ஆதரவாக அரசியல் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரேணுகாவை போலீஸார் மிரட்டியுள்ளனர். ஒருதலைப்பட்சமாக போலீஸார் அப்போது பேசியதாகக் கூறப்படுகிறது.

தனது பக்கம் உள்ள நியாயத்தை அப்போது ரேணுகா எடுத்துக் கூறியுள்ளார். அதிகம் பேசினால் தவறான தொழில் செய்பவர் என வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று போலீஸார் ரேணுகாவை  மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பலர் முன் தன்னை இவ்வாறு பேசிவிட்டார்களே என்ற அவமானத்தில் வெளியே வந்த ரேணுகா பெட்ரோலை வாங்கி தன்மேல் ஊற்றிக்கொண்டு ஸ்டேஷன் முன் தீக்குளித்தார்.

அவர் மீது தண்ணீரை ஊற்றி, பின் ரேணுகாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார்.

ரேணுகா சிகிச்சையில் இருக்கும் நேரத்தில் அவரது கணவர், மனைவி பேசியதை வாக்குமூலமாக எடுத்துள்ளார். அதில் ஏம்மா இப்படி செய்துகொண்டாய் என அவர் கேட்க, ''என்னை ஸ்டேஷனில் அவமானமாகப் பேசிவிட்டார்கள், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. இருவரும் கடுமையாக நடந்துகொண்டார்கள்'' என்று கூறுகிறார்.

“சொன்னா என்னம்மா விட்டுட்டு வரவேண்டியது தானே, இப்ப பாரு நமக்குத்தானே துன்பம்” என்று கணவர் கேட்க ”என்னைத் தவறான தொழில் செய்பவர் வழக்கில் உள்ளே தூக்கி போட்டுவிடுவேன் என்று அவர்கள் மிரட்டினார்கள் நான் அப்படிப்பட்டவளா?” என்று கோபத்துடன் கேட்கிறார் ரேணுகா.

இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் ரேணுகா இன்று உயிரிழந்தார். அவர் பேசிய ஆடியோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கணவர் கஜேந்திரன் ஒப்படைத்தார்.

அந்தப் புகாரின் பேரில் திருவேற்காடு இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், எஸ்.ஐ. சரவணன் நடந்துகொண்ட விதம் குறித்தும், நடைபெற்ற சம்பவம் குறித்தும் காவல் ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில் உயர் அதிகாரிகள் திருவேற்கடு காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, காவல் நிலையம் முன் பெண் தீக்குளித்து இறந்ததை அடுத்து திருவேற்காடு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அலெக்சாண்டர், எஸ்.ஐ. சரவணன் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்,tamil news india news தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்,tamil news india news தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்''; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்
கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா, அம்ருதாவிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in