தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து
சமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு  மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஷாசாத் சோலங்கி(வயது19) என்ற இளைஞர் சமூக ஊடங்களில் புல்வாமா தாக்குதல் குறித்து தேசவிரோத கருத்துக்களையும், இரு சமூகங்களுக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.


இவரின் கருத்துக்கள் சமூக ஊடங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பரவியது. சோலங்கியின் கருத்துக்கள் அடங்கிய பதிவு, ஒரு போலீஸ் அதிகாரிக்கு  கிடைக்கவே, தாமாக முன்வந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, அவரின்  முகவரியை போலீஸார் கண்டுபிடித்ததில் தங்கூர் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துங்கார்பூர் பகுதி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த முகவரிக்கு சென்ற போலீஸார் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரப்பிய  சோலங்கியை கைது செய்தனர். விசாரணையில் சோலங்கி 12-ம் வகுப்பு படித்து வருபவர் எனத் தெரிந்தது.

தனது முகநூல் பக்கத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து தேசவிரோத கருத்துக்களையும், பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்களையும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை தாமாக முன்வந்து வழக்காகப் போலீஸார் பதிவு செய்து கைது செய்தனர்.

சோலங்கி மீது ஐபிசி 124ஏ(தேசவிரோத சட்டம்), 153ஏ(இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்