நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவை ஒத்து கொ ள்ளாமல் சிலர் ஜலதோசம்,மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புதன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறையின் மூலம். உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்..

 வைட்டமின் ஏ,சி,இ:

 வைட்டமின் ஏ {பீட்டா-கரோட் டீன்} வைட்டமின்  சி  மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புதன்மையை அதிகரித்து,உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 கேரட்,பச்சை காய்கறிகள்,தக்காளி,செர்ரி,நெல்லிக்காய்,சிட்ரஸ்பழங்கள்,மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண,தினமும் 5 பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்..

 எலுமிச்சை சாறு:

 எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.இது அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ் பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல்  உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான வெப்ப நிலையை உருவாக்க உதவுகின்றன.எலுமிச்சை சாற்றினை தண்ணீர்,சூப்கள், சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

 துத்த நாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பலப்படுத்த உதவுகிறது.துத்தநாக பற்றாக்குறை உடலின் நோய் எதிர்ப்புதன்மையைபாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்புதன்மையை முற்றிலுமாக செயல் இழந்து போக வைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே,உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பீன்ஸ்,சிப்பி வகை மீன்கள், பருப்புகள் தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிக அளவு காணப்படுகிறது.

 மூலிகைகள்:

 உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.இவை உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.மஞ்சள்,பூண்டு,சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிரிர்த்து போராடும். தன்மை உள்ளது.

 

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவு முறைகள்உடலின் நோய் எதிர்பு தன்மையை  அதிகரிக்க உதவுகின்றன.இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில் சாதரண பசுவின் பாலைவிட 50 சதவிகிதம் வைட்டமின்  இ சத்தும் ,75 வதவிகிதம் அதிக அளவு   கரோட்டீனும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள்,காய்கறிகள்ஆகியவற்றிலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின்  சி,தாதுக்கள் மற்றும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
13 Oct 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

06 Oct 2020

சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil

06 Oct 2020

உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்

01 Oct 2020

நெஞ்சுச்சளி நீங்க தூதுவளை கசாயம் | Thoothuvalai kashayam | Tamil

29 Sep 2020

சளி, இருமல், தொண்டை வலி உடனே சரியாக இதை குடிங்க | Indira Samayal சுக்கு மல்லி காபி

20 Sep 2020

மாதவிடாய் கால வயிற்று வலி சரியாக | Mathavidai vali kuraiya | Tamil maruthuvam

17 Jun 2019

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்

06 Feb 2019

கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy

31 Jan 2019

மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil

01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.