பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் புல்வமா தாக்குதலை கண்டித்தும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மிகவும் துயரமான சம்பவமாகும், இதுபோன்ற தாக்குதல்களை ஏற்க முடியாது. நமது நாடு  40 ராணுவ வீரர்களை இழந்து விட்டது.  எந்தஒரு சக்தியும் இந்தியாவை பிளவுப்படுத்த முடியாது.  வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நாடு உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் சமரச பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அறுவெறுக்கத்தக்கது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம்.

இது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம் என்பதால் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் அரசை முழுவதுமாக ஆதரிப்பதே எங்கள் நிலைப்பாடு.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு, பாதுகாப்பு படையினருக்கு முழு ஆதரவை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/hhDbMM






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்