மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்
பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.


மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்
ம.தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். இலக்கியவாதியான இவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரனை ஆதரித்தவர், தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் நடிப்பில் உருவாகி உள்ள படம் எல்.கே.ஜி. இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது:-

‘நன்றிக்குரிய மனிதர், நாஞ்சில் சம்பத் சார். இந்த படத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும்னு அவருக்கு போன் பண்ணிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் கட்சியில் சேர்ந்தார். இன்னோவா வாங்கினார் என்று செய்திகளில் படித்ததால் வசதியாக இருப்பார் என்று நினைத்தேன்.

பட்டினப்பாக்கத்தில் ஹவுசிங்போர்டில் வீடு. 600 சதுர அடி வீடு அது. அந்த வீட்டைப் பாக்கும்போதே ஒருமாதிரியாக இருந்தது. அவர்கிட்ட கதையை சொல்லி ‘படத்துல எனக்கு அப்பாவா நடிக்கணும் சார்’னு சொன்னேன்.

ஒருநிமிடம் யோசித்தார். என்னை பார்த்தார். ‘சரி, நடிக்கிறேன். ‘என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டுறியா?’ என்று கேட்டார். 40 வருடமா அரசியல்ல இருக்கார். பல அரசியல்வாதிகள் தங்கள் பையனுக்காக காலேஜே கட்டியிருக்காங்க. ஆனால் நாஞ்சில் சம்பத், பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டமுடியலை. ரொம்பவே வேதனையா இருந்துச்சு.

படத்துல அவருக்கு வில்லத்தனமான அரசியல்வாதி வேடம்தான். ஆனால் அவரோட குணம் தெரிய ஆரம்பித்ததும் அவரோட நல்ல மனசு புரிந்து அவரோட கேரக்டரை மாற்றினோம்.


அவரோட குணத்தை வைத்தே கதாபாத்திரம் பண்ணினோம். அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கிறார். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதிக்கவேண்டும்’. இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி பேசினார்.


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்