tamilkurinji logo


 

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

First Published : Thursday , 11th October 2018 06:55:54 PM
Last Updated : Thursday , 11th October 2018 06:55:54 PM


மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema


நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து நம்பிக்கை அடைந்த முஸ்லிம் பெண்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள என்ஐஎஸ்ஏ என்ற பெண்கள் கூட்டமைப்பு மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தவும், இமாம்களாகப் பெண்களை நியமிக்கவும் அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

இது தொடர்பாக என்ஐஎஸ்ஏ அமைப்பின் தலைவர் வி.பி.ஜுஹாரா திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''புனித குர்ஆன் நூலிலும், இறைத்தூதர் முகமது நபியும் ஒருபோதும் பெண்கள் மசூதிக்குள் வந்து தொழுகை நடத்தக்கூடாது என்று கூறியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து வயதில் உள்ள பெண்களும் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

ஆண்களைப் போன்று, பெண்களும் தங்களுக்குரிய நம்பிக்கையின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள்படி வழிபாடு நடத்த உரிமை உண்டு. சபரிமலையைப் போன்று, மசூதிகளிலும் அனைத்துப் பெண்களும் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் காட்டப்படும் பாகுபாடுகள் அகற்றப்பட்டு, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது குறித்து நாங்கள் எங்கள் வழக்கறிஞருடன் பேசி வருகிறோம். விரைவில் மனுத்தாக்கல் செய்வோம். தற்போதுள்ள நிலையில், ஜமாத் இ இஸ்லாமி, முஜாஹித் மசூதிகளிலும் மட்டுமே பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் சன்னிப்பிரிவு மசூதிகளில் பெண்களுக்கு இன்னும் தடை இருக்கிறது.

அவ்வாறு சில நேரங்களில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்கென பிரத்யேக வாயில்கள் இருக்கின்றன. அதன்வழியேதான் வர வேண்டும். எங்களின் கோரிக்கை பாலியல் பாகுபாட்டை முறியடிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் மசூதிகளில் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகும்.

புனித மெக்கா நகரில் கூட தொழுகை நடத்தும்போது இதுபோன்ற பாலினப் பாகுபாடுகள் இல்லை. காபாவில் கூடப் பெண்களும், ஆண்களும் நம்பிக்கையுடன் ஒன்றாகத் தொழுகை நடத்துகிறார்கள். அப்படிஇருக்கும்போது, நம்நாட்டில் உள்ள மசூதிகளில் மட்டும் ஏன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

இறைத்தூதர் முகமது நபி தனது மனைவியை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதித்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் நன்கு கற்றறிந்த பெண்கள் இருந்தாலும் அவர்கள் மசூதிகளில் இமாம்களாகப் பணியாற்ற மறுக்கப்படுகிறது. இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும்''.இவ்வாறு ஜுஹாரா தெரிவித்தார்.

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக கேரள மாநில அரசு அறிவித்தது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்...

 சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டத்தில் என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என குஜராத்திற்கு குற்றவாளியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்கள் மீது கடுமையான

மேலும்...

 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164