மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

தேவையான பொருள்கள்:
நாட்டுக் கோழி - அரை கிலோ
நறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்
நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மல்லி இலை  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்.

தாளிக்க:

காய்ந்த மிளகாய் -3
பட்டை சோம்பு கிராம்பு - சிறிதளவு

.செய்முறை:

முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.  மஞ்சள் தூள் உப்பு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து  குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் மசாலா தூள்கள் அனைத்தையும்  சேர்த்து வதக்கி  வாசனை போனவுடன்  1 நறுக்கின தக்காளி சேர்த்து  நன்கு வதக்கி அதனுடன்  வேக வைத்துள்ள சிக்கனை  சேர்த்து,  நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு கெட்டியானவுடன் மிளகுதூள் தேவையான அளவு உப்பு சேர்த்து  கிரேவி பதம் வந்ததும் , மல்லி இலை தூவி இறக்கவும்.சுவைாயன  மதுரை  நாட்டுக்கோழி கிரேவி ரெடி


12 Jul 2021

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கார்லிக் சிக்கன் | Restaurant Style Garlic Chicken Recipe

09 Jul 2021

சிம்பிள் சிக்கன் வறுவல் ரொம்ப ரொம்ப ஈசி / SIMPLE CHICKEN FRY

15 Jun 2021

மதுரை நாட்டுக்கோழி கிரேவி | madurai nattu koli gravy

14 May 2021

கார்லிக் சிக்கன் வறுவல் | garlic chicken varuval

08 Mar 2021

முந்திரி சிக்கன் கிரேவி / cashew chicken gravy recipe

20 Mar 2020

சப்பாத்திக்கு சூப்பரான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

19 Jun 2019

சிம்பிள் சிக்கன் வறுவல் | chicken varuval recipe

18 Feb 2019

சிக்கன் ரசம் | Chicken Rasam Recipe

14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy