மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத அகவிலைப்படி கடந்த மார்ச் மாதத்தில் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிந்த மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/E1AATj






19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை