மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்

முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள்

ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

தேன் மற்றும் பட்டை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு சுத்தமான காட்டனை வைத்து, 5 நிமிடம் கழித்து காட்டனை நீக்கி, முகத்தை நீரால் கழுவிடுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.


முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகளை இன்னும் எளிமையான வழியில் நீக்க நினைத்தால், வீட்டில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு போக்கலாம்.

அதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 2-3 நிமிடங்கள் கழித்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் இது மிகவும் அற்புதமான ஸ்கரப். இந்த ஸ்கரப்பை ஒருவர் அவ்வப்போது போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுக்கலாம்.

இந்த ஸ்கரப் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.


ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, விரலால் சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள்.

பின் முகத்தை நீரால் கழுவி, துணியால் துடைத்திடுங்கள். கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.


https://goo.gl/Y3Ntd2


13 Feb 2021

முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்

06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka

01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga

19 Sep 2018

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்

14 Sep 2018

மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்