ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டனர். மகன்கள் வீடு திரும்பாததை அறிந்த ராகேஷ் விசாரித்தார். அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார்.

சிறிது நேரத்தில் ராகேஷுக்கு கடத்தல்காரர்களிடம் இருந்து போன் வந்தது. அதில், மகன்களை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் 50 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டினர்.

இதையடுத்து, கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தது. பணம் வராத ஆத்திரத்தில் கடத்தல்காரர்கள் அவரது மகன்களை உயிருடன் கொளுத்தினர். இதில் பிரியனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். திவ்யனேஷ் படுகாயம் அடைந்தான்.

ராகேஷுக்கு வந்த போன் அழைப்பை வைத்து போலீசார் கடத்தல்காரர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்க்ளை துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர். அதன்பின் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட திவ்யனேஷ், லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

விசாரணையில், ஹரிஓம், ரகுவர், ஷிவ்புஜன் மற்றும் சூரஜ் ஆகிய 4 பேர் கடத்தல்காரகள் என்பதும், அவர்களில் ரகுவர் ராகேஷ் வீட்டு வேலையாள் என்பதும், சிறுவர்களை கடத்தி பணம் பறிப்பதற்கு முக்கிய காரணமாகவும் அவன் இருந்தான் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சிறுவன் பிரியனேஷ் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

50 லட்சம் ரூபாய் பணம் தராததால் கடத்தப்பட்ட 6 வயது சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்றது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
https://goo.gl/Ae2VLh


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை