tamilkurinji logo


 

ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்

First Published : Thursday , 4th October 2018 08:46:02 PM
Last Updated : Thursday , 4th October 2018 08:46:02 PM


ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்,tamil news india news


கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது.


இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.

அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும்.

இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விளக்குகிறது.

அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு பச்சை அலர்ட் ஆகும்.

இது குறித்து வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:-

“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற  எச்சரிக்கை கொடுக்கபடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் 7 தேதியே முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன.  பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை என  கூறி உள்ளார்.

ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்,tamil news india news ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்,tamil news india news ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலி
 சென்னை மாதவரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரட்டை குழந்தைகள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 27 குழந்தைகள் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தமிழக மக்களை பயத்தில் உறைய வைப்பது டெங்கு காய்ச்சல் தான்.ஆண்டுதோறும்

மேலும்...

 சென்னையில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல்
சென்னையில் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டுவதால் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று எழும் பூர்

மேலும்...

 சென்னையில் பயங்கரம் மனைவியைக் கொன்று கணவனும் தற்கொலை
பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத் தகராறில் ஆத்திரமுற்ற கணவன் மனைவியைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.பூந்தமல்லி சின்னமாங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி துர்கா(26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கூலி வேலை

மேலும்...

 தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். சென்னையில் கோயம்பேடு,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164