வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக வலைதளமான பேஸ்புக் 1.16 லட்சம் கோடிக்கு கடந்த மாதம் வாங்கியது. இந்த சமூக வலைதளங்களுக்கு உலக முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 9.30 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். சுமார் 4 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பெறுகின்றனர். இந்நிலை யில், இந்த இரு சமூக வலைதளங்களும் இணைந்துள்ள நிலையில், இவற்றின் செயல்பாட்டினால், தனிநபரின் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவிற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய வர்த்தக போட்டி உறுதி ஆணையமான ‘காம்பட்டீஷன் கமிஷன் ஆப் இந்தியா’ (சிசிஐ)வை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது இணைந்துள்ள இந்த சமூக வலைதள நிறுவனங்கள் முதலில் சிசிஐயிடம் ஒப்புதல் பெறவேண் டும். இது தொடர்பான விண்ணப்பம் சிசிஐயிடம் வரும். அப்போது சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.
https://goo.gl/iLcvZP


19 May 2017

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்

15 May 2017

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

18 Jul 2015

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்

25 May 2015

ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்

26 Jan 2015

கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!

16 Oct 2014

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3

24 Jun 2014

ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்

08 Apr 2014

புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி

09 Mar 2014

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

24 Feb 2014

மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்