குழந்தைகளுக்கு உடல் பருமனை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு

குழந்தைகளுக்கு உடல் பருமனை உண்டாக்கும் மரபணு கண்டுபிடிப்பு
இன்றைய நவீன சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் உடல் பருமன் பிரச்சினை மிகப்பெரிதாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, குழந்தை பருவத்திலேயே ஏற்படும் உடல் பருமன் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
 
உடல் பருமன் பிரச்சினை இறப்பு ஏற்படும் அளவிற்கு தீவிரமானது. உணவுப் பழக்கவழக்கம், சோம்பேறித்தனம் ஆகியவை உடல் பருமன் நோய்க்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
 
இந்நிலையில் உடல் பருமனை ஏற்படுத்தக்கூடிய மரபணுவை ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமனிற்கான மரபணுவை கண்டறிய உலக அளவில் ஆய்வுகள் நடைபெற்று வந்தன.இந்த அமைப்பிற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஒரு பகுதி நிதியை ஒதுக்கியிருந்தது.
 
முன்னதாக ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க நிறுவனங்கள் நிதி உதவியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற 14 ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 5,530 குழந்தைகளிடம் உடல் பருமனைக் ஏற்படுத்தும் மரபணுவைக் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.
 
இந்த ஆய்வின் முடிவில் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான மரபணுக்களை கண்டறிந்தனர். குரோமோசோம் 13-ல், ஓ.எல்.எப்.எம். 4 எனும் ஒரு மரபணுவையும், குரோமோசோம் 17-ல் எச்.ஓ.எக்ஸ்.பீ 5 எனும் மற்றொரு மரபணுவையும் கண்டறிந்துள்ளனர்.
 
இக்கண்டுபிடிப்பு உடல் பருமன் நோயை குணப்படுத்துவதற்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள சென்டர் பார் அப்ளைடு, ஜினோம்களின் இணை இயக்குனர் ஆஸ்ட்ரான் கிராண்ட் தெரிவித்தார்.
 
இந்நோயை கட்டுப்படுத்தவும் சிகிச்சையளிக்கவும். இந்த கண்டுபிடிப்பு மிக உதவியாக இருக்குமெனவும், இதை நடைமுறைக்கு கொண்டு வர மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
https://goo.gl/evqGex


14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு