தாய்மார்களே டயாபர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தாய்மார்களே டயாபர்  பற்றி உங்களுக்கு தெரியுமா?
இன்றைய தாய்மார்கள் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க சிரமப்படும் அவர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே, குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் தாய்மார்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, டயாபர்களே பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், 'டயாபர்'கள் வரத் துவங்கின. இதன் பிரபலத்தால், துணி, டயாபர்களின் பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.

குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும்

டிஸ்போஷபிள் டயாபர்களால், குழந்தைகளுக்கு ரேஷஸ் (Rashes) எனப்படும் புண்கள், பின்பகுதியில் உராய்வு, உட்பட சில பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால், குழந்தைகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். தூக்கி எறியப்படும் டயாபர்களில் உள்ள டயாக்ஸின் (Dioxin) என்னும் ரசாயனம் ப்ளீச் செய்யும் போது உபயோகப் படுத்தப்படுகிறது. இது புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டதை அடுத்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இதனை உபயோகிக்க தடை விதித்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு

டிஸ்போஷபிள் டயாபர்கள் (Disposable diapers) சோடியம் பாலிக்ரைசலேட் (Sodium polyacrylate) என்னும் கரிம பலபடி பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகப்படுத்திவிட்டு தூக்கி எறிவதனால் மண்ணில் மட்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக் வடிவத்திலான இந்த ரசாயனம், சிதைவடைய 500 ஆண்டுகாலம் தேவை.

இதே போன்று, சுத்தம் செய்து, மீண்டும் பயன்படுத்தப்படும் டயாபர்களும் உள்ளன. இந்த டயாபர்கள் ஈரமானதும், அவற்றின் உள்ளே இருப்பவற்றை தூக்கி எறிந்து விட்டு, துவைத்த பின், மீண்டும் பயன்படுத்தலாம். முதல் குழந்தைக்கு பயன்படுத்திய, இந்த வகை டயாபர்களை, மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு பயன்படுத்துவதால், உலகம் வெப்பமயமாதல் 40 சதவீதம் குறையும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ரீயூசபிள் டயாபர்'கள் (Reusable diapers) சிதைவடைய, ஆறு மாத காலமே ஆகின்றன.

துணி டயாபர் பாதுகாப்பானது

டிஸ்போஷபில் டயாபர்களில் டிரிபுயூடில்-டின் கூட்டுப் பொருட்கள் உள்ளன. இதனை உபயோகிப்பதால் மனிதர்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உபயோகித்த பின்னர் தூக்கி எறியப்படுவதால் மண்ணில் மட்கிப்போகாமல் அதை உண்ணும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், துணி 'டயாபர்'களால், பல்வேறு நன்மைகள் உள்ளன. துணி டயாபர்கள் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு ரேஷஸ் போன்றவை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

'டிஸ்போஷபிள்' டயாபர்களுக்கு மக்கள் ஏராளமான அளவில் பணம் செலவழிக்கின்றனர். ஆனால், ரீயூசபிள் டயாபர்கள், மீண்டும் பயன்படுத்தப்படுவதால், அதற்கான செலவு குறைகிறது. எனவே, 'டிஸ்போஷபிள்' டயாபர்களுடன் ஒப்பிடும் போது, 'ரீயூசபிள்' டயாபர்களால் அதிகளவு பணம் சேமிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பேஷனாக அணிவிக்க விரும்பினால், அதற்காகவே, துணி டயாபர்களில், பல்வேறு வண்ணங்கள் மற்றும் பேஷன்களில் வருகின்றன.

உங்கள் குழந்தைகளுக்கு டயாபரால் ஏற்படும் சரும பிரச்சனைகளை தவிர்க்க பாதுபாப்பு நிறைந்த துணி டயாபர்களை பயன்படுத்துங்கள். ஏதேனும் வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் உபயோகித்தால் போதும். எனவே அதிக அளவு பணம் செலவு வைக்காத சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லாத டயாபர்களை வாங்கி உபயோகிக்கவேண்டும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
https://goo.gl/yigtMD


14 Nov 2017

குழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments

29 Nov 2016

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்

18 Oct 2016

குழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்

22 Aug 2016

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்

09 Mar 2014

குழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்

02 Feb 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

09 Jul 2013

டீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்

26 Jun 2012

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

24 Jun 2012

குழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் ?

24 Jun 2012

குழந்தையின் வயிற்றுப்போக்கு