tamilkurinji.co.in sports news daily news from tamilkurinji.co.in http://www.tamilkurinji.co.in Sat, 16 Dec 2017 22:53:15 +0000 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.co.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.co.in logo http://www.tamilkurinji.co.in sports news feed provided by tamilkurinji.co.in. Click to visit. IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/IPL/கிரிக்கெட்டில்/புனே/அணிக்கு/9–வது/வெற்றி/அடுத்த/சுற்றுக்கு/முன்னேறியது/&id=40254 IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 5–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் புனேயில் நேற்று மாலை நடந்த 55–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறியது.

பஞ்சாப் அணியில் மேட் ஹென்றி, மனன்வோரா ஆகியோர் நீக்கப்பட்டு இயான் மோர்கன், ஸ்வப்னில் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். புனே அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் பந்திலேயே அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் (0) உனட்கட் பந்து வீச்சில் மனோஜ்திவாரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் புனே அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் மள, மள வென்று சரிந்தன.

15.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 22 ரன்னிலும் (20 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 13 ரன்னிலும் (17 பந்துகளில் ஒரு சிக்சருடன்), ஷான் மார்ஷ் 10 ரன்னிலும் (13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஸ்வப்னில் சிங் 10 ரன்னிலும் (17 பந்துகளில்) ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். புனே அணி தரப்பில் ‌ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், உனட்கட், ஆடம் ஜம்பா, டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய புனே அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி 20 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன் எடுத்த நிலையில் அக்‌ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 34 ரன்னும் (34 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 15 ரன்னும் (18 பந்துகளில்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். புனே அணி வீரர் உனட்கட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

14–வது (கடைசி) லீக் ஆட்டத்தில் ஆடிய புனே அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4–வது இடத்தில் இருந்து, ஐதராபாத், கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளி விட்டு 2–வது இடத்தை பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்கும் தகுதி பெற்றது. கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 7–வது தோல்வியை சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

tamilkurinji editor Mon, 15 May 2017 07:03:29 +0000 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/IPL/கிரிக்கெட்டில்/குஜராத்தை/வீழ்த்தியது,/ஐதராபாத்/அணி /&id=40247 ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். ஏற்கனவே முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 53–வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஐதராபாத் அணி ஆடியது.

ஐதராபாத் அணி வீரர் யுவராஜ்சிங்குக்கு கைவிரலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பெற்றார். குஜராத் அணியில் பாசில் தம்பி, தவால் குல்கர்னி நீக்கப்பட்டு பிரவீன்குமார், முனாப் பட்டேல் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித், இஷான் கி‌ஷன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

5.2 ஓவர்களில் குஜராத் அணி 50 ரன்னை எட்டியது. அதிரடியாக ஆடிய இஷான் கி‌ஷன் 27 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் அவர் கண்ட முதல் அரைசதம் இதுவாகும். 9.3 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 111 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அரை சதத்தை எட்டிய வெய்ன் சுமித் (54 ரன்கள், 33 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன்) அந்த ஓவரிலேயே ரஷித் கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதனை அடுத்து கேப்டன் சுரேஷ் ரெய்னா, இஷான் கி‌ஷனுடன் இணைந்தார். அபாரமாக ஆடிய இஷான் கி‌ஷன் (61 ரன்கள், 40 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன்) முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அத்துடன் ஆட்டத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. தொடக்க ஜோடி அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தை பின்னர் வந்த வீரர்கள் யாரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்த ஓவரிலேயே சுரேஷ்ரெய்னா (2 ரன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமலும், ஆரோன் பிஞ்ச் 2 ரன்னிலும் ரஷித் கான் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்கள்.

அடுத்து வந்த வீரர்களான பவுல்க்னெர் (8 ரன்), பிரதீப் சங்வான் (0), அங்கித் சோனி (0), பிரவீன்குமார் (1 ரன்), முனாப்பட்டேல் (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். 19.2 ஓவர்களில் குஜராத் அணி 154 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. ரவீந்திர ஜடேஜா 20 ரன்னுடன் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், ரஷித்கான் 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும், சித்தார்த் கவுல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 18 ரன்னிலும் (11 பந்துகளில் 4 பவுண்டரியுடன்), அடுத்து களம் கண்ட ஹென்ரிக்ஸ் 4 ரன்னிலும் (2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

3–வது விக்கெட்டுக்கு தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.1 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 52 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 69 ரன்னும், விஜய் சங்கர் 44 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் பிரவீன்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

14–வது (கடைசி) லீக் ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 17 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட குஜராத் அணி சந்தித்த 10–வது தோல்வி இதுவாகும். tamilkurinji editor Sun, 14 May 2017 07:04:30 +0000 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/மாட்ரிட்/ஓபன்/டென்னிஸ்:/கனடா/வீராங்கனை/பவுச்சர்டிடம்/‌ஷரபோவா/தோல்வி/&id=40216 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக 15 மாத தடைக்கு பிறகு சமீபத்தில் களம் திரும்பிய 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 258–வது இடத்தில் இருப்பவருமான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா, 59–வது இடத்தில் இருக்கும் கனடா வீராங்கனை பவுச்சர்ட்டை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பவுச்சர்ட் 7–5, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் ‌ஷரபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 5–வது முறையாக ‌ஷரபோவாவை நேருக்கு நேர் சந்தித்த பவுச்சர்ட் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்று இருக்கிறார். ‘‌ஷரபோவா மோசடி பேர்வழி. ஊக்க மருந்து பயன்படுத்திய அவருக்கு ஆயுட்கால தடை விதிக்க வேண்டும். அதனை விடுத்து அவருக்கு வைல்டு கார்டு வாய்ப்பு வழங்கியது தவறானது என்று வெளிப்படையாக விமர்சித்து இருந்த பவுச்சர்ட், ‌ஷரபோவாவை வீழ்த்தியதும் மைதானத்தில் கடுமையாக துள்ளி குதித்து எதிராளிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார்.

வெற்றிக்கு பிறகு பவுச்சர்ட் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டிக்கு முன்பாக நான் கூடுதல் ஊக்கம் பெற்றேன் எனலாம். பல வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வழக்கமாக இப்படி வீரர்–வீராங்கனைகள் வாழ்த்து சொல்லமாட்டார்கள். டென்னிஸ் உலகத்தினர் பலரும் ‌ஷரபோவாவுக்கு எதிரான கருத்தில் தான் உள்ளனர். அவர்கள் எனக்கு குறுந்தகவல் மூலம் வாழ்த்தினார்கள். எனக்காக மட்டுமின்றி எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்காகவும் நான் சிறப்பாக செயல்பட்டு ‌ஷரபோவாவை வீழ்த்தினேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ‌ஷரபோவா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மற்றபடி நான் யாரிடம் தோற்றேன் என்பது பற்றியும், என்னை சுற்றி நடக்கும் வி‌ஷயங்கள் குறித்தும் அதிகம் கவலைப்படவில்லை. நானும் ஒரு பெரிய போட்டியாளர் தான். ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் கடினமாக உழைக்கிறோம் என்பதை பொறுத்தே போட்டியின் முடிவு இருக்கும். இன்று என்னுடைய நாளாக அமையவில்லை. இந்த தோல்வி என்னை மேலும் சிறந்த வீராங்கனையாக உருவாக்க வழிவகுக்கும். இந்த தோல்வி வருங்காலங்களில் அதிக போட்டிகள் மற்றும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார். tamilkurinji editor Wed, 10 May 2017 06:47:59 +0000 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஐ.பி.எல்./கிரிக்கெட்டில்/கொல்கத்தாவை/தோற்கடித்து/பஞ்சாப்/அணி/6–வது/வெற்றி/&id=40214 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.

10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டும் பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை முழுமையாக இழந்து விட்டன.

இந்த நிலையில் மொகாலியில் நேற்று இரவு நடந்த 49–வது லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமை யிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்–கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. தோல்வி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்ற     நெருக்கடியுடன்     பஞ்சாப் அணி களம் கண்டது.

பஞ்சாப் அணியில் குர்கீரத்சிங், வருண் ஆரோன், டி.நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டு ராகுல் திவேதியா, மேட் ஹென்றி, ஸ்வப்னில் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பியுஷ் சாவ்லா, ஷெல்சன் ஜாக்சன் ஆகியோருக்கு பதிலாக ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், மனன்வோரா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் மார்ட்டின் கப்தில் ஒரு பவுண்டரி விளாசியதுடன் 8 ரன்கள் சேர்த்தார். முதலில் சற்று திணறிய மனன்வோரா சுனில் நரின் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 2 பவுண்டரி விளாசிய மனன்வோரா அதே ஓவரில் (5–வது ஓவர்) 5–வது பந்தை அடித்து ஆட முயன்றார். ஆனால் பந்து கையுறையில் (குளோவ்ஸ்) பட்டு விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா கையில் தஞ்சம் அடைந்தது. மனன்வோரா 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து ஷான் மார்ஷ் களம் இறங்கினார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்தில் (12 ரன்கள், 16 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து விருத்திமான் சஹா, ஷான் மார்ஷ்சுடன் ஜோடி சேர்ந்தார். பவர் பிளே ஓவரில் (முதல் 6 ஓவர்களில்) பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் திரட்டியது.

கிரான்ட்ஹோம் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசிய ஷான் மார்ஷ் (11 ரன்கள், 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அடுத்த ஓவரில் கிறிஸ் வோக்ஸ் பந்தை அடித்து ஆடினார். ஆனால் பந்து இன்சைடு எட்ஜ் ஆகி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து கேப்டன் மேக்ஸ்வெல், விருத்திமான் சஹாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். கிரான்ட்ஹோம் வீசிய ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்சர் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 13.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்னை எட்டியது.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல், குல்தீப் வீசிய ஓவரில் (16–வது ஓவரில்) முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தையும் அடித்து ஆட முயல அதனை கிறிஸ் வோக்ஸ் அருமையாக கேட்ச் செய்தார். மேக்ஸ்வெல் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். மேக்ஸ்வெல்–விருத்திமான் சஹா இணை 4–வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

அடித்து ஆடிய விருத்திமான் சஹா (38 ரன்கள், 33 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்வப்னில் சிங் (2 ரன்) கிறிஸ்வோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அக்‌ஷர் பட்டேல் 8 ரன்னுடனும் (10 பந்துகளில்), ராகுல் திவேதியா 15 ரன்னுடனும் (8 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் 10 ஓவரில் 63 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் திரட்டியது. கொல்கத்தா அணி தரப்பில் கிறிஸ்வோக்ஸ், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், சுனில் நரின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 52 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன் எடுத்து ரன்–அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ராகுல் திவேதியா, மொகித் ‌ஷர்மா தலா 2 விக்கெட்டும், மேட் ஹென்றி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

12–வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 6–வது வெற்றியை தனதாக்கியதுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 13–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5–வது தோல்வியை சந்தித்தாலும் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடருகிறது.

tamilkurinji editor Wed, 10 May 2017 06:43:25 +0000 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/3-வது/ஒருநாள்/கிரிக்கெட்:/விராட்/கோலி/சதம்/வீண்,//இந்தியா/மீண்டும்/தோல்வி///-ஆஸ்திரேலியா/வெற்றி//&id=37105 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்தது

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கடந்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்து கலக்கிய ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் ஷிகர் தவான், இன்று ரன் சேர்ப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டார்.

அவருக்கு பக்க பலமாக வழக்கம் போல் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மந்தமாக ஆடிய தவான் 91 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதேவேளையில், ஒருபுறம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி  சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்த 24 வது சதம் இதுவாகும்.

3 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரகானே 55 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 117  பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 117 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாஸ்டிங்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி  50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பிஞ்ச்(21 ரன்கள்) ஸ்மித் (41 ரன்கள்) பெய்லி (21 ரன்கள்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் மார்ஷ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  ஆஸ்திரேலிய அணி 29.6 வது ஓவரில் 167 ரன்களை சேர்த்து இருந்த போது மார்ஷ் 62 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால்,ஆஸ்திரேலிய அணிக்கு லேசான நெருக்கடி ஏற்பட்டது.ஆனால், மேக்ஸ்வெல் நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இந்திய அணி துல்லிய பீல்டிங்கால், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றாலும், மேக்ஸ்வேல், கடும் சவாலாக விளங்கினார்.

சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் அணியின் வெற்றிக்கு 1 ரன்கள் தேவைப்பட்ட போது உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.  ஆஸ்திரேலிய அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகன் விருது 96 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

tamilkurinji editor Sun, 17 Jan 2016 14:25:05 +0000 ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஜிம்பாப்வேயை/62/ரன்கள்/வித்தியாசத்தில்/வீழ்த்தி/இந்திய/அணி/அபார/வெற்றி/&id=35790
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ரஹானே 63(83)  ரன்களும், விஜய் 72(95) ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் மட்சிவா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால்  வெற்றி என களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

பந்துவீச்சில்  புவனேஸ்வர் குமார்  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜிம்பாப்வே தரப்பில் சிபூப்பா 72(100) ரன்கள் எடுத்தார். எனவே இந்திய அணி 62 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை பெற்றுள்ளது.

tamilkurinji editor Sun, 12 Jul 2015 17:13:49 +0000 கெய்ல் அதிரடி சதம் வீண் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/கெய்ல்/அதிரடி/சதம்/வீண்/&id=35681 இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட்  செய்த கென்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. பெல் டிரம்மாண்ட் 51, கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் 114 ரன் (58 பந்து, 16  பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

பில்லிங்ஸ் 24, ஸ்டீவன்ஸ் 22 ரன் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சாமர்செட்  அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தொடக்க வீரராகக் களமிறங்கிய கிறிஸ் கேல் 151 ரன் விளாசி (62 பந்து, 10 பவுண்டரி, 15 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற  வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் சாமர்செட் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. கேல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். tamilkurinji editor Mon, 01 Jun 2015 15:34:09 +0000 நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/நீட்டா/அம்பானி/விருந்தில்/திளைத்த/மும்பை/அணி/வீரர்கள்/&id=35650 பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.

எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த விழாவை, ரசிகர்கள் இலவசமாக கண்டு களித்தனர். இதைத் தொடர்ந்து மும்பை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி, தனது வீட்டில் ‘ஸ்பெஷல்’ விருந்து கொடுத்தார்.

இதில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். தவிர, பாண்டிங், கும்ளே, ஜான்டி ரோட்ஸ், பயிற்சியாளர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர். தவிர, பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா, அவரது கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர். tamilkurinji editor Thu, 28 May 2015 15:28:20 +0000 இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/இந்தியா-தென்னாப்பிரிக்கா/மோதல்/தயார்/&id=35616 இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி  நேற்று அறிவித்தது.

இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்றும் மும்பையில் நடந்த தீர்மானிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள போட்டியை இந்துார் அல்லது குவாலியரில் நடத்தப்படும். மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை கோல்கட்டா, மொகாலி, தரம்சாலாவில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளை புனே, விசாகப்பட்டினம், டில்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை தொடர்களுக்கான முழுஅட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ., சார்பில் தெரிவிக்கப்பட்டது. tamilkurinji editor Mon, 25 May 2015 15:03:21 +0000 ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஷரபோவா/பிரெஞ்ச்/ஓபன்/தொடரை/கைப்பற்றினார்/&id=35615 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ ரஷ்யாவின் மரியா ஷரபோவா, எஸ்தோனியாவின் கையா கனேபியை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 6–2 என, எளிதாக கைப்பற்றிய ஷரபோவா, தொடர்ந்து இரண்டாவது செட்டை 6–4 என, வென்றார். முடிவில், 6–2, 6–4 என, வெற்றி பெற்ற ஷரபோவா, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில், ஜெர்மனியின் கெர்பர், ஹங்கேரியின் டிமியா பபோஸ் மோதினர். இதில் அபாரமாக ஆடிய கெர்பர் 6–0, 6–1 என்ற நேர் செட் கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மடிசன் பிரங்லேவை தோற்கடித்தார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் பிரான்சின் அலைஸ் கார்னட், ஸ்பெயினின் கார்லா சாரஸ் நவரோ, போலந்தின் பவுலா கனியா, ஜெர்மனியின் சபைன் லிசிக்கி, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச் 6–0, 7–5, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டஸ்கோ 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் டாரோ டேனியலை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் செக்குடியரசின் ரதக் ஸ்டெபானக், ஜெர்மனியின் பெஞ்சமின் பெக்கர், அர்ஜென்டினாவின் ஜுயன் மொனாகோ, இத்தாலியின் பேபியோ போக்னினி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். tamilkurinji editor Mon, 25 May 2015 14:58:56 +0000 பாட்மின்டன் தரவரிசை : சாய்னா மீண்டும் நம்.1 http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பாட்மின்டன்/தரவரிசை/:/சாய்னா/மீண்டும்/நம்.1/&id=35602  உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ‘ரேங்கிங்’ (தரவரிசை) பட்டியலை, சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா 2வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சிந்து 11வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் (4வது இடம்), காஷ்யப் (13), பிரனாய் (15) ஆகியோர் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 22வது இடத்தில் இருந்து 21வது இடத்துக்கு முன்னேறியது.
tamilkurinji editor Sat, 23 May 2015 17:33:00 +0000 பாகிஸ்தான் ஆர்ப்பாட்டமான வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பாகிஸ்தான்/ஆர்ப்பாட்டமான/வெற்றி/&id=35601 ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறு ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச கிரிக்கெட் துவங்கியது. நேற்று லாகூரில் நடந்த முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு மககட்சா 43 ரன்கள் எடுத்தார். சிபாண்டா (13), கவன்ட்ரி (14) ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடிய சிகும்பரா அரை (54) சதம் விளாசினார். சீன் வில்லியம்ஸ் (16), சிக்கந்தர் (17) அடுத்தடுத்து கிளம்ப, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் அணிக்கு முக்தர், ஷேசாத் ஜோடி பலமான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள்சேர்த்தபோது, ஷேசாத் (55) ஆட்டமிழந்தார். முக்தர் 83 ரன்கள் (45 பந்து) விளாசினார். முகமது ஹபீஸ் (12), சோயப் மாலிக் (7), உமர் அக்மல் (4) நிலைக்கவில்லை. அப்ரிதி ஒரு பவுண்டரி அடிக்க, பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சர்பராஸ் அகமது (3), அப்ரிதி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
tamilkurinji editor Sat, 23 May 2015 17:27:09 +0000 பைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்!!! http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பைனலில்/கர்ஜிக்குமா/சென்னை/சிங்கம்!!!/&id=35588 எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.

ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–2ல் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி இணைந்து துவக்கம் தந்தனர். நெஹ்ரா வீசிய 3வது ஓவரில் அதிரடி காட்டிய கோஹ்லி தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்நிலையில் 5வது ஓவரை வீசிய நெஹ்ரா இரட்டை ‘அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோஹ்லியை (12) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் டிவிலியர்சை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த மன்தீப் சிங் (4), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார்.

விக்கெட் ஒருபுறம் சரிந்ததால், நிதானமாக ஆடிய கெய்ல், அஷ்வின், மோகித் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தினேஷ் கார்த்திக், ரெய்னாவின் 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். ரெய்னா பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்த கெய்ல் (41) ஆறுதல் தந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் (28) நெஹ்ரா ‘வேகத்தில்’ வெளியேறினார். டுவைன் பிராவோ பந்தை சிக்சருக்கு அனுப்பிய டேவிட் வைஸ் (12) நிலைக்கவில்லை. ஹர்சால் படேல் (2) ‘ரன்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய சர்பராஸ் கான் (31) ஓரளவு கைகொடுத்தார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 மட்டும் ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் நெஹ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்மித் (17), அரவிந்த் பந்தில் அவுட்டானார். பெங்களூரு அணியின் சொதப்பலான பீல்டிங்கை பயன்படுத்திக் கொண்ட ஹசி, டுபிளசி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. 10வது ஓவரை வீசிய சாகல், டுபிளசி (21), ரெய்னாவை (0) அவுட்டாக்கி திருப்பம் தந்தார்.

தனது அனுபவ ஆட்டத்தை தொடர்ந்த ஹசி, சாகல் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதத்தை பதிவு செய்தார். வைஸ் பந்தில் ஹசி (56) வெளியேறினார். ஹர்சால் பந்தில் சிக்சர் அடித்த நேகி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ டுவைன் பிராவோ (0) போல்டானார்.

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்சால் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் தோனி 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் 2 ரன் கிடைத்தது. நான்காவது பந்தில் தோனி (26) அவுட்டாக, 2 பந்தில் ஒரு ரன் தேவை என ‘டென்ஷன்’ ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் அஷ்வின் ஒரு ரன் எடுக்க, சென்னை அணியின் வெற்றி உறுதியானது.

சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (1), அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

கோல்கட்டாவில் நாளை நடக்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன. இம்முறை தகுதிச் சுற்று–1ல் மும்பை அணியிடம் சந்தித்த தோல்விக்கு பைனலில் சென்னை அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெஹ்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, இம்முறை 500 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர், 16 போட்டியில் 3 அரைசதம் உட்பட 505 ரனகள் எடுத்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (562 ரன், 14 போட்டி), ராஜஸ்தானின் அஜின்கியா ரகானே (540 ரன், 14 போட்டி), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513 ரன், 16 போட்டி) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

* தவிர இவர், ஐ.பி.எல்., அரங்கில் 3வது முறையாக ஒரு தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் 2013 (634 ரன்), 2011 (557 ரன்) தொடரில் இந்த இலக்கை அடைந்தார்.

ஐ.பி.எல்., அரங்கில் மே 22ல் நடந்த போட்டியில் இரண்டு முறை (எதிர்– 2011ல் பெங்களூரு, 2014ல் ஐதராபாத்) சென்னை அணி தோல்வியை தழுவியது. ஆனால் இந்த சோகமான வரலாறு நேற்றைய போட்டியில் தலைகீழானது. சென்னை அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

சென்னை அணி, பேட்டிங்கின் போது 5வது ஓவரில் 5 ரன், 6வது ஓவரில் 6 ரன், 7வது ஓவரில் 7 ரன் எடுத்தது சற்று வித்தியாசமாக இருந்தது.

நேற்று பெங்களூரு அணியின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. அரவிந்த் வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் டுபிளசி கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை கெய்ல் நழுவவிட்டார். பின், இந்த ஓவரின் 3வது பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் ஹசி துாக்கி அடித்த பந்தை ஹர்சால் படேல் கோட்டைவிட்டார். டேவிட் வைஸ் வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்த ஹசி கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை தினேஷ் கார்த்திக் நழுவவிட்டார். ஒரு சில ‘ரன்–அவுட்’ வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹசி அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

தகுதிச் சுற்று–2ல் பெங்களூரு அணியை வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் 6வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 5 பைனலில் 2ல் (2010, 2011) வெற்றி பெற்று கோப்பை வென்றது. மூன்றில் (2008, 2012, 2013) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. கடந்த 2009ல் அரையிறுதி வரை முன்னேறிய சென்னை அணி, கடந்த ஆண்டு ‘பிளே–ஆப்’ சுற்றோடு திரும்பியது.

* ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மூன்றாவது முறையாக (2010, 2013, 2015) மோத உள்ளன. முன்னதாக மோதிய 2 பைனலில் இரு அணிகளும் தலா ஒரு முறை (2010ல் சென்னை, 2013ல் மும்பை) வெற்றி பெற்று கோப்பை வென்றன.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றலாம். மும்பை அணி வென்றால் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம்.

tamilkurinji editor Fri, 22 May 2015 16:47:55 +0000 அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ. http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அர்ஜுனா/விருதுக்கு/ரோஹித்/சர்மாவின்/பெயரை/பரிந்துரைத்து/பி.சி.சி.ஐ./&id=35563 இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜனவரி முதல் 21 போட்டிகளில் விளையாடி அவர், சராசரியாக 55.05 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும்.

மேலும் புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் விவதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி டெண்டுல்கர், டிராவிட், கங்குலி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. tamilkurinji editor Sun, 26 Apr 2015 15:29:36 +0000 ஐபிஎல் 8: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஐபிஎல்/8:/கொல்கத்தா/அணியை/வீழ்த்தி/பெங்களூரு/அபார/வெற்றி/&id=35526
இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8வது சீசன் 5வது லீக் ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

பின்னர் 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
tamilkurinji editor Sat, 11 Apr 2015 17:50:06 +0000 அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/அனுஷ்காவின்/அசத்தல்/நடனத்துடன்/கோலாகலமாகத்/தொடங்கிய/ஐபிஎல்/8/தொடக்க/விழா//&id=35512 8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை குறுக்கிட்டதால் விழா 9.00 மணிக்கு துவங்கியது.

நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரின் கண்கவர் நடனம் இடம் பெறுகிறது

. நடிகர்கள் சைப் அலி கான், பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதம் ஆகியோ ரும் இணைந்து வீரர்கள் மற்றும் நட்சத்திரங்களை அறிமுகம் செய்கின்றனர்.

இதில் முதல் முறையாக 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்னர் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பிர், ஐ.பி.எல். கோப்பையை கொண்டு வந்து, 8வது தொடர் தொடங்கி விட்டதாக அறிவிப்பார்.

தொடக்க விழா நிகழ்ச்சி யை தொடர்ந்து நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன tamilkurinji editor Tue, 07 Apr 2015 16:05:58 +0000 மாலையில் திருமணம் சென்னையில் ஐபில் போட்டிக்காக பயிற்சியில் சுரேஷ் ரெய்னா http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/மாலையில்/திருமணம்//சென்னையில்/ஐபில்/போட்டிக்காக/பயிற்சியில்/சுரேஷ்/ரெய்னா/&id=35492 இன்று மாலை டெல்லியில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ஐபில் போட்டிகளுக்காக சென்னையில் இன்று தீவிர வலைப்பயிற்சியில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, தனது பள்ளி தோழியான பிரியங்கா சவுத்ரியை மணக்கிறார்.

சுரேஷ் ரெய்னா–பிரியங்கா சவுத்ரி திருமண நிச்சயதார்த்தம் காசியாபாத் ராஜ்நகரில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் வீட்டில் நேற்று முன்தினம் எளிய முறையில் நடந்தது.

இதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் சுரேஷ்ரெய்னா திருமணம் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

இன்று திருமணம் நடைபெற இருந்தாலும், ஐபில் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா, இன்று சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திருமணத்திற்காக வலைப்பயிற்சியை முடித்துவிட்டு மாலை 6 மணியளவில் டெல்லி திரும்பும் ரெய்னா, நேரடியாக திருமணம் நடைபெறும் ஓட்டலுக்கு செல்கிறார்.

ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபில் கிரிகெட் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபில் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹனிமூன் செல்வதை ரெய்னா தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தில் இந்திய கேப்டன் தோனி அவரது மனைவி மற்றும் மகள் ஷிவாவுடன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல், ஷிகர் தவான், விராட் கோலி, ஆர்.பி சிங், பிரவீன் குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்பதால் திருமணம் நடைபெறவுள்ள பகுதியில் விவிஐபி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. tamilkurinji editor Fri, 03 Apr 2015 01:29:57 +0000 விராட் கோலி, அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளியுங்கள் - யுவராஜ் சிங் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/விராட்/கோலி,/அனுஷ்காவின்/தனிப்பட்ட/வாழ்க்கைக்கு/மதிப்பளியுங்கள்/-/யுவராஜ்/சிங்/&id=35469 விராட் கோலி - அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடிவாங்கி இந்தியா வெளியேறியது. ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்த இமாலய இலக்கை, நோக்கி இந்திய அணி விளையாடியபோது, துணை கேப்டன் விராட் கோலி பொறுப்பே இல்லாமல் விளையாடி விட்டார்.

மிட்செல் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து பேட்டின் மேல் முனையில் பட்டு உயரே எழும்பியது. அதை விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் ஓடிச் சென்று கேட்ச் செய்தார்.

13 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து கோலி வெளியேற, சில ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். கேலரியில் அமர்ந்திருந்த கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் போராட்டமின்றி சாதாரணமாக சரண் அடைந்து விட்டது தான் நமது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த உடன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுக்க தொடங்கிவிட்டனர். அவர்களுடைய உருவ பொம்பையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

அனுஷ்கா மீது ரசிகர்கள் பாய்ந்தது, பாலிவுட் நடத்திரங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் அனுஷ்காவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விராட் கோலி - அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள் என்று இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துஉள்ள இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், “எங்களுடைய வெற்றி மற்றும் தோல்வியின் போது ஆதரவு தெரிவிக்கும் உண்மையான இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு! விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளியுங்கள்,” என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் ஆதரவு மற்றும் மதிப்பு அளிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே.

இனி வரும் நாட்களில் விராட் கோலி நிச்சயம் நாட்டுக்காக சிறப்பாக தொடர்ந்து விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றும் யுவராஜ் சிங் குறிப்பிட்டு உள்ளார்.
tamilkurinji editor Mon, 30 Mar 2015 18:39:11 +0000 என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், நியூசிலாந்தை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற எலியாட் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/என்னுடைய/தங்கையின்/திருமணத்தை/மிஸ்/செய்கிறேன்,/நியூசிலாந்தை/இறுதி/போட்டிக்கு/அழைத்து/சென்ற/எலியாட்//&id=35436 ன்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்று நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் நடந்த முதலாவது அரைஇறுதியில் உள்ளூர் அணியான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான திரிலிங்கான அரைஇறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தென்ஆப்பிரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த 36 வயதான கிரான்ட் எலியாட் நியூசிலாந்து மண்ணின் மைந்தன் கிடையாது. அவர் தென்ஆப்பிரிக்க நாட்டுக்காரர் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்த எலியாட், அங்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க அணித்தேர்வில் இனரீதியிலான இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுவதால் அவருக்கு அந்த அணியில் இடம் மறுக்கப்பட்டது.

அவரது திறமையை கண்டு வியந்த நியூசிலாந்து முன்னாள் டெஸ்ட் வீரர் கென் ருதர்போர்டு, தங்கள் நாட்டிற்கு வரும்படி ஆலோசனை வழங்கினார்.

அதன்படி 2001–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவை காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று ஒரே நாளில் புதிய ஹீரோவாகவும் உருவெடுத்து விட்டார்.

84 ரன்கள் விளாசி நியூசிலாந்தை முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

எலியாட் கூறுகையில், ‘இந்த வெற்றி எனக்குரியதோ அல்லது நியூசிலாந்து அணிக்குரியதோ அல்ல. ஒட்டுமொத்த நியூசிலாந்து மக்களுக்குரியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது உண்மையிலேயே பெருமை அளிக்கிறது.

இறுதிப்போட்டியில் யாரை சந்திக்கப்போகிறோம் என்பது கவலையில்லை. இரு அணியுமே (இந்தியா அல்லது ஆஸ்திரேலியா) தரமான அணி தான். இதே போன்று நாங்கள் தொடர்ந்து விளையாடினால் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது’ என்றார்.

என்னுடைய தங்கையின் திருமணத்தை மிஸ் செய்கிறேன், என்றும் நியூசிலாந்து அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்றுள்ள எலியாட் கூறியுள்ளார்.

போட்டியில் தான் விளையாடிய நியூசிலாந்து வெற்றிபெற்றாலும், தோல்வியின் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் மைதானத்தில் விழுந்த ஸ்டெயினுக்கு, எலியாட் ஆறுதல் கூறினார்.

எனது தங்கைக்கு வருகிற வெள்ளியன்று திருமணம் நடைபெற உள்ளது, துரதிஷ்டவசமாக நான் அவருடைய திருமணத்தை மிஸ் செய்கிறேன். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் என்னுடைய அழகான சந்தோஷம், ஆனால் நான் அவருக்கான சிறப்பு பரிசை பெறுவதற்கு செல்கிறேன் என்று நினைக்கிறேன். என்று எலியாட் கூறினார்.
tamilkurinji editor Wed, 25 Mar 2015 00:12:23 +0000 பதட்டமடைந்து வெற்றியை கோட்டை விட்ட தென்னாப்பிரிக்கா http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/பதட்டமடைந்து/வெற்றியை/கோட்டை/விட்ட/தென்னாப்பிரிக்கா/&id=35427 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா முதலில் திணறியது.தென்னாப்பிரிக்கா 30.3-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது.. டிவில்லியர்ஸ் இறங்கியதும், விளையாட்டு விறுவிறுப்பை எட்டியது. பந்துவீச்சில் அச்சுறுத்திய நியூசிலாந்தை டிவில்லியர்ஸ் அடித்து ஆடினார்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 216 ரன்கள் எடுத்து இருந்தது. மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது. மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 குறைக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் அதிரடி காட்டினார். டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரம் காட்டியதால் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்களை எட்டியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 43 ஓவர்களுக்கு 298 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

மாற்றப்பட்ட விதிமுறைப்படி 3 பவுலர்கள் அதிகபட்சமாக 9 ஓவர்களும், 2 பவுலர்கள் அதிகபட்சமாக 8 ஓவர்களும் வீச முடியும். நியூசிலாந்துக்கு கட்டாய பேட்டிங் பவர் பிளே 9 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப பேட்டிங் பவர்பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேட் செய்ய வந்த நியூசிலாந்தின் தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடினார். ஸ்டெயின், மோர்க்கல் போன்ற உலகத் தரம் வாய்ந்த பவுலர்களும் அவரது அதிரடி தாக்குதலில் தப்பவில்லை. ஸ்டெயின் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் கப்தில் சிங்கிள் எடுக்க, 2வது பந்தை சந்தித்தார்

மெக்கல்லம். அந்த பந்து நடு ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி, அவுட் ஸ்விங் ஆனது. அதை பேக்புட் சென்று தடுத்தார் மெக்கல்லம். அப்போது அவரது இடது காலி்ல் மாட்டியிருந்த ஷூ தனியாக கழன்று ஓடியது.இதுமிகவும் அரிதான சம்பவமாகும். இப்படித்தான், நடப்பு உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே பேட் உடைந்ததும் சுவாரசியமாக பேசப்பட்டது.

மெக்கல்லம் ஷூ ஏன் தனியாக கழன்று ஓடியது என்று ரசிகர் ஒருவர் கூறிய கமெண்ட்தான் டாப். சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் இரண்டாவது பேட்டிங் தொடங்கியதால், அவசரத்தில் ஷூ லேஸ் கட்ட மறந்து வந்துவிட்டார் போலும் என்றார் அந்த ரசிகர். ஷூவை கழற்றி போட்டு சுழன்று, சுழன்று அடித்த மெக்கல்லம், 26 பந்துகளில், 59 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

6.1வது ஓவரில் 71 ரன்கள் குவித்த நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை அப்போது பறிகொடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆதிக்கம் ஆரம்பித்தது. 8.5வது ஓவரில் மோர்கல் பந்தில் கேன் வில்லியம்சன் கிளீன் பௌல்ட் ஆகி வெளியேறினார். எனவே கப்திலும், டைலரும் பொறுமையாக ஆட தொடங்கினர்.

ஆனாலும் ரன் ரேட்டை குறையவிடவில்லை. ரோஸ் டைலர் 30 ரன்னிலும், கப்தில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், கிரான்ட் எலியட் மற்றும் கோரி ஆன்டர்சன் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தில் இருந்து அணியை மீட்டது.

கடைசிகட்டத்தில் 58 ரன்களில் ஆன்டர்சன் அவுட் ஆன நிலையில், அதை தொடர்ந்து களமிறங்கிய லூக் ரோன்ச்சியும் 8 ரன்களில் நடையை கட்டினார்.

32வது ஓவரில் 204 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது, அதிரடி வீரர் ஆன்டர்சன் மற்றும் எலியட் ஆடிக் கொண்டிருந்தனர். ஸ்டெயின் பந்து வீச்சில் எலியட் ஆப் சைடில் தட்டி விட்டார். அதற்குள் பாதி பிட்ச் ஓடிவிட்டார் ஆன்டர்சன்.

எனவே பந்து வீச்சாளர் முனையிலுள்ள ஸ்டம்பில் பந்தை எறிந்தால் ஆன்டர்சனை ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பின் அருகே ஓடிவந்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ். பந்து அவரது கையில் சிக்கியபோது, ஆன்டர்சன் வெகு தொலைவில் நின்றார். ஆனால், பந்து வேகமாக வந்ததால், டி வில்லியர்ஸ் கையில் இருந்து பந்து நழுவியது.

வெறும் கையிலேயே ஸ்டம்பை அடித்துவிட்டார் டி வில்லியர்ஸ். ஆனால், அதன்பிறகு, குஷ்டியடித்து பந்தை பிடித்து மீண்டும் ஸ்டம்பில் அடித்தார்.

அப்போதும், ஆன்டர்சன் கிரீசை வந்து அடையவில்லை. இருப்பினும், இது 3வது நடுவர் ரிவியூவ்வுக்கு போனது. வெறும் கையால் ஸ்டம்பை அடித்தபோது, பெய்ல்ஸ் கீழே விழுந்துவிட்டதால், மீண்டும் பந்தை பிடித்து அடித்தது செல்லாது என்பது நடுவர் தீர்பாகியது. ஆன்டர்சன்தப்பினார்.

அவர் அப்போது 33 ரன்களுடன் இருந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் கிடைத்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா வீண் செய்துவிட்டது. மறுமுனையில் எலியட் சளைக்காமல் ஆடினார்.

கடைசி ஓவரில் (43வது ஓவர் ), நியூசிலாந்து வெற்றிக்கு 12 ரன்கள் தேவை, இறுதி போட்டிக்குள் செல்ல 11 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை ஸ்டெய்ன் வீசிய நிலையில், அந்த ஓவரின் 5வது பந்தில் எலியட் சிக்சர் அடித்து வெற்றியை தட்டிப் பறித்தார்.

7வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குள் வந்த நியூசிலாந்து முதல் முறையாக இறுதி போட்டிக்குள்  நுழைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பை சோகம் தொடருகிறது. நெருக்கடியான நேரத்தில் ஆட வந்து 84 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்ற நியூசிலாந்தின் எலியட்டுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

நெருக்கடியான நேரத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் நடுக்கமடைந்து கோட்டை விடுவார்கள் என்ற உதாரணத்தை இன்றைய போட்டியிலும் வீரர்கள் நிரூபித்தனர். முக்கிய தருணங்களில் கேட்சை விட்டனர், எளிதான ரன் அவுட் சான்சுகள் ஏகப்பட்டதை கோட்டை விட்டனர். tamilkurinji editor Tue, 24 Mar 2015 00:37:53 +0000 உலகக் கோப்பை-பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/உலகக்/கோப்பை-பாகிஸ்தானை/வீழ்த்தி/அரையிறுதிக்கு/தகுதி/பெற்றது/ஆஸ்திரேலியா/&id=35397 அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தின் 3வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பிறகு 8வது ஓவரில் வார்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த  ஸ்மித்தும் (65 ரன்கள்), வாட்சனும் (64 ரன்கள்) அரைச் சதத்தை எட்டினர். கிளார்க் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் (44) வாட்சனுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி, வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் 33.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

tamilkurinji editor Fri, 20 Mar 2015 00:57:20 +0000 உலகக் கோப்பை கிரிக்கெட்-அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/உலகக்/கோப்பை/கிரிக்கெட்-அரையிறுதிக்கு/தென்னாப்பிரிக்கா/தகுதி/&id=35387 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இன்று இலங்கை அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக சங்ககரா 45 ரன்களும், திரிமனே 41 ரன்களும், மேத்தியூஸ் 19 ரன்களும் எடுத்தனர்.  இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பெரேரா 3 ரன்களில் அவுட் ஆனார்.

பெரேரா 3 ரன்களில் அப்போட் பந்துவீச்சில் காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.இதனையடுத்து தில்ஷனுடன், சங்கக்கரா களமிறங்கினார். தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையின் தொடக்க பாட்னர்ஷிப்பை உடைத்தது. தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமலே அவுட் ஆனார். ஸ்டெயின் பந்துவீச்சில், பிளிஸ்சிஸிடம் கேட்ச் கொடுத்தார்.

இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அணியில் அதிகபட்சமாக டி காக்  78 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பை போட்டியின் நாக் அவுட் முறையில் தென்னாப்பிரிக்க அணி பெறும் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து அரையிறுதிக்கு தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றது. tamilkurinji editor Tue, 17 Mar 2015 23:13:18 +0000 ரோகித்சர்மா ஆட்டம் குறித்து கவலை இல்லை: டோனி கருத்து http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ரோகித்சர்மா/ஆட்டம்/குறித்து/கவலை/இல்லை:/டோனி/கருத்து/&id=35365 டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி அனைத்து ‘லீக்’ ஆட்டங்களிலும் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை 19–ந்தேதி சந்திக்கிறது.

ஒரு நாள் போட்டியில் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த ரோகித்சர்மா இந்த உலக கோப்பையில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 159 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 31.80. அதிகபட்சமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 64 ரன் எடுத்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டம் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை என்று டோனி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

ரோகித்சர்மா ஆட்டம் சிறப்பாகவே இருப்பதாக உணர்கிறேன். அவரது ஆட்டத்திறன் நன்றாக உள்ளது. அவரால் எப்போதுமே ரன்களை குவித்து விட முடிகிறது.

ரன்களை குவிக்கா விட்டாலும் அவரது பேட்டிங் நன்றாகத்தான் இருக்கிறது. மோசமான நிலையில் இல்லை. இதனால் நான் அதிகமாக கவலைப்படவில்லை. ரன்களை அதிரடியாக குவித்து அவர் நல்ல நிலைக்கு மீண்டும் திரும்புவார்.

ஜடேஜாவின் பேட்டிங் குறித்து சிறிது கவலைப்படுகிறேன். அதே நேரத்தில் அவருக்கு போதுமான அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது பந்து வீச்சு நன்றாகவே இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் அவர் இன்னும் மேம்படவேண்டும். இவ்வாறு டோனி கூறியுள்ளார். tamilkurinji editor Sun, 15 Mar 2015 23:30:09 +0000 உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/உலகக்/கோப்பை/கிரிக்கெட்/பாகிஸ்தான்/வெற்றி/பெற்று/காலிறுதிக்குள்/நுழைந்தது/&id=35353 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிலெய்ட்டில் இன்று நடந்த பாகிஸ்தான் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய  அயர்லாந்து அணி 50 ஓவரில் 237 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு 107 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக  அகமது 101  ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது. tamilkurinji editor Sat, 14 Mar 2015 23:38:35 +0000 ஜிம்பாப்வே அச்சுறுத்தலை முறியடித்த ரெய்னா, தோனி: இந்தியா வெற்றி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஜிம்பாப்வே/அச்சுறுத்தலை/முறியடித்த/ரெய்னா,/தோனி:/இந்தியா/வெற்றி/&id=35346 ஆக்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மீண்டும் இந்திய அணி எதிரணியினரை ஆல் அவுட் செய்த விதத்தில் 300 ரன்களுக்கும் மேல் அடித்து விடுவோம் என்று அச்சுறுத்திய ஜிம்பாப்வேயை 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி 92 ரன்களுக்கு தவன், ரோஹித் சர்மா, ரஹானே, கோலி விக்கெட்டுகளை இழந்து தோல்வி முகம் காட்டியது.

அத்தருணத்தில் ரெய்னா, தோனி இணைந்து அபாரமாக ஒரு ஜோடியைக் கட்டமைத்தனர். ரெய்னா உலகக்கோப்பையில் தன் முதல் சதத்தை எடுத்ததோடு, ஒருநாள் கிரிக்கெட்டில் 5-வது சதத்தையும் எடுக்க, தோனி தனது 57-வது ஓருநாள் அரைசதத்தை எடுக்க இந்திய அணி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ரெய்னா சதம் அடித்த பிறகு 47-வது ஓவரின் 2-வது பந்தில் ஸ்கோர் 257 ஆக இருந்த போது ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது.

கடைசியில் 48.4 ஓவரில் பன்யாங்கரா வீசிய ஷார்ட் பந்தை தோனி டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சருக்குத் தூக்கி அடித்து தனது வழக்கமான பாணியில் வெற்றிக்கான ஷாட்டை ஆடினார். இந்தியா 48.4 ஓவர்களில் 288/4 என்று வெற்றி பெற்றது.

ரெய்னா 104 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 110 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, கேப்டன் தோனி 76 பந்துகளில் 8 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்தியா தொடர்ச்சியாக 6 வெற்றியை இந்த உலகக்கோப்பையில் பெற்றுள்ளது. லீக் அனைத்திலும் வெற்றி, உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10-வது வெற்றியைப் பெற்று தோனி, கிளைவ் லாய்டைக் கடந்தார்.

மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய துரத்தலில் அதிகபட்சமான இலக்கை வெற்றிகரமாக துரத்தியதும் இதுவே முதல் முறை.

ரெய்னா, தோனி இடையே 196 ரன்கள் பார்ட்னர்ஷிப். இதனை இவர்கள் 26 ஓவர்களில் ஓவருக்கு 7.53 என்ற ரன் விகிதத்தில் எடுத்து ஆதிக்கம் செலுத்தினர்.

இந்த உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு அடுத்த படியாக இந்திய அணி அனைத்து போட்டிகளையும் லீக் சுற்றில் வென்றது. 2011 உலகக்கோப்பைப் போட்டிகளில் கூட தென்னாப்பிரிக்காவுக்க்கு எதிராக ஒரு தோல்வியை லீக் சுற்றில் இந்தியா சந்தித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் மேலும் முழுமையையும், துல்லியத்தையும் இந்திய அணி காட்டியது.

மோசமான ஷாட் தேர்வில் ஒரே ஓவரில் அவுட் ஆன ஷிகர் தவன், ரோஹித் சர்மா

விரட்டலின் போது முதல் ஓவரில் ரோஹித் சர்மா, பன்யாங்கராவை முதலில் ஒரு அதிர்ஷ்ட எட்ஜ் பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்ததாக அருமையான பேக்ஃபுட் பஞ்சில் பாயிண்டில் பவுண்டரி அடித்துத் தொடங்கினார். முதல் ஓவரில் 9 ரன்கள். அதன் பிறகு சடாரா அருமையாக ஒரு மெய்டன் ஓவர் வீசினார்.

ரோஹித் 16 ரன்களில் இருந்த போது பன்யாங்கராவின் லெந்த் பந்தை தேவையில்லாமல் ஆன் திசையில் மிகப்பெரிய ஷாட் அடிக்கச் சென்றார், பந்து முன் எட்ஜில் பட்டு கவர் திசையில் உயரே எழும்பியது சிகந்தர் ராசா கேட்ச் பிடித்தார்.

அதே ஓவரில் 5-வது பந்தில் தவனும் வெளியேறினார். கட் ஷாட் ஆட போதிய இடைவெளி இல்லாத நிலையில் மெதுவாக வந்த பந்தை கட் ஆட முயன்று மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் தவன். 7-வது ஓவரில் 21/2 என்று ஆனது.

கோலி, ரஹானே அரைசதக் கூட்டணி:

அதன் பிறகு கோலி களமிறங்கி சடாராவின் ஓவரில் மிட் ஆஃபில் ஒரு அருமையான பவுண்டரியையும், பிறகு அவருக்குச் சாதகமான பிளிக் ஷாட்டில் ஒரு பவுண்டரியையும் அடித்துத் தொடங்கினார்.

பிறகு ரஹானே, பன்யாங்கரா ஓவரில் இரண்டு அருமையான ஆஃப் திசை பவுண்டரிகளை அடித்தார். 13-வது ஓவரில் இந்தியா 50 ரன்களை எட்டியது.

மீண்டும் ரஹானே, கோலி தலா ஒரு பவுண்டரியை அடிக்க இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தனர். ஸ்கோர் 71 ஆக இருந்த போது 17-வது ஓவரில் ரஹானே, முபரிவா பந்தை ஷாட் கவரில் அடித்துவிட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வந்தார். கோலி திருப்பி அனுப்பினார் ரீச் ஆக முடியவில்லை ரன் அவுட் ஆனார். ரஹானே 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 17-வது ஓவரில் 71/3 என்று சற்றே தடுமாற்றம் கண்டது.

ரெய்னா களமிறங்கினார். ஸ்கோர் 92 ரன்களுக்குச் சென்ற போது 48 பந்துகளில் 4பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த கோலி, சிகந்தர் ராசா பந்தை ஸ்வீப் ஆடமுயன்றார் ஆனால் பந்து சிக்கவில்லை. கால்களைச் சுற்றி பவுல்டு ஆனார். இந்தியா 23 ஒவர்களில் 92/4 என்று ஜிம்பாப்வேவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால்...

ரெய்னா, தோனி அதிரடிக் கூட்டணியில் திக்குமுக்காடிய ஜிம்பாப்வே:

24-வது ஓவர் முதல் 29-வது ஓவர் வரை நிதானித்த தோனி, ரெய்னா ஜோடி இந்த 6 ஓவர்களில் 20 ரன்களையே சேர்த்தது. ஒரு பவுண்டரி மட்டுமே வந்தது.

21 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 176 ரன்கள். ஓவருக்கு 8.38 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பார்வையாளர்களுக்கு லேசான பதட்டம் ஏறப்ட்டிருக்கும்.

ஆனால் பதட்டமடையாத ரெய்னா, சான் வில்லியம்ஸ் வீசிய 30-வது ஓவரின் முதல் பந்தை அவரது பாணி சுழற்றலில் மிட்விக்கெட் மீது சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்து கொஞ்சம் வேகமாக வீசினார், ஆனால் முடிவில் மாற்றமில்லை, இடத்தில்தான் மாற்றம், லாங் ஆனில் சிக்சருக்குப் பறந்தது.அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது.

பவுண்டரி எதையும் அடிக்காத தோனி, மிரே வீசிய 32-வது ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தை லாங் லெக் திசையில் கம்பீர புல் அடித்து முதல் பவுண்டரியை விளாசினார். அடுத்த பந்தை தேர்ட் மேன் திசையில் அபாரமாகத் தள்ளிவிட்டு இன்னொரு பவுண்டரியை அடித்தார். அந்த ஓவரில் 11 ரன்கள். பிறகு தோனி சிகந்தர் ராசாவின் புல்டாஸை பவுண்டரி அடித்தார். 34வது ஓவரின் 2-வது பந்தில் இந்தியா 150 ரன்களை எட்டியது.

35-வது ஓவரில் ரெய்னா அரைசதம் எடுக்கும் முன் ஸ்வீப் ஆடி ஒரு கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பை ஷார்ட் பைன் லெக் திசையில் ஹேமில்டன் மசகாட்சா கோட்டை விட நொந்து போனார் பவுலர் சிகந்தர் ராசா.

பேட்டிங் பவர் பிளே தொடங்கும் முன் இந்தியா 35 ஓவர்களில் 158/4. 36-வது ஓவரில் தோனியின் பவுண்டரியுடன் 5 ரன்கள். 37-வது ஓவரில் ரெய்னா இன்சைட் அவுட் சென்று ஆஃப் திசையில் ஒரு அபாரமான பவுண்டரி அடித்து அரைசதத்தை 67 பந்துகளில் கடந்தார். 38-வது ஓவரில் தோனி, ரெய்னா தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். 39-வது ஓவரில் இந்தியா 184/4. வெற்றிக்குத் தேவையான் ரன் விகிதம் ஓவருக்கு 9.45 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ரெய்னா மீண்டும் ஒரு அபாரமான ஆன் திசை சிக்ஸரை அடித்தார். அந்த ஓவரில் தோனி, ரெய்னா, 100 ரன் கூட்டணி அமைத்தனர். 40வது ஓவர் முடிவில் ஸ்கோர் 197/4. பவர் பிளேயில் 5 ஒவர்களில் 39 ரன்கள்.

பவர் பிளே முடிந்தவுடன் உண்மையில் ரெய்னா, தோனி தங்கள் ஷாட்களை திறக்கத் தொடங்கினர். மசாகாட்சாவை 42-வது ஓவரில் ரெய்னா ஒரு புல்லட் கவர் டிரைவ் அடித்து பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து அவ்வளவாக ஷார்ட் பிட்ச் இல்லையென்றாலும் ரெய்னாவின் மட்டைச் சுழற்றல் வேகத்துக்கு மிட்விக்கெட்டில் சிக்சரானது. மீண்டும் முபரிவாவை மிகவும் சாதுரியமாக விக்கெட் கீப்பர் பின்னால் தட்டி விட்டு ஒரு பவுண்டரியை அடித்தார்.

அதே ஓவரில் தோனி 57-வது ஒருநாள் அரை சதத்தை 56 பந்துகளில் எடுத்து முடித்தார். 45-வது ஓவரில் பைன்லெக்கில் ஒரு சாதுரிய பவுண்டரியை ரெய்னா அடித்து 99 ரன்களுக்கு வந்தார். பிறகு அதே ஓவரில் 1 ரன் எடுத்து 94 பந்துகளில் உலகக்கோப்பையில் முதல் சதம் கண்டார் ரெய்னா. அவரது 5-வது ஒருநாள் சதம்.

47-வது ஓவரில் தோனி களம் புகுந்தார். 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குலசேகராவை அடித்த சிக்சரை நினைவூட்டும் ஒரு சிக்சரை தோனி, முபரிவா பந்தில் அடித்தார். அடுத்ததாக புல்டாஸ், இதனை எதிர்பார்த்த தோனி சரியாக அதனை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார்.

49-வது ஓவரில் 4-வது பந்தை பன்யாங்கரா ஷார்ட் ஆக வீச அதனை கம்பீரமாக புல் ஆடி பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கான ரன்களை எடுத்து ஸ்டைலாக முடித்தார் தோனி. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.

இன்று காலை ஜிம்பாப்வே அணியின் பொறுப்பு கேப்டன் பிரெண்டன் டெய்லர் மிக அற்புதமான சதம் ஒன்றை எடுத்து அதிரடி முறையில் 138 ரன்களை எடுத்தார். இது அவர் ஜிம்பாப்வேவுக்காக ஆடும் கடைசி போட்டி. எனவே அவருக்கு இது ஒரு உணர்ச்சிகரமான போட்டியாகும். இதில் கேப்டன்சியிலும் சிறப்பாக பணியாற்றி இந்தியாவுக்கு காலிறுதிக்கு முன்பாக கொஞ்சம் உடல் நல சோதனை செய்துவைத்தார் என்றே கூற வேண்டும். tamilkurinji editor Sat, 14 Mar 2015 01:31:07 +0000